சமையல் குறிப்புகள்
- 1
2கப் பச்சரிசியை நன்றாக கழுவி 2காய்ந்த மிளகாய் சேர்த்து 2மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பின்னர் 1/4கிலோ அளவு பரங்கிகாயை எடுத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் 2வெங்காயம் மற்றும் 2தக்காளியை நறுக்கி வைக்கவும். அதனுடன் 1/4மூடி தேங்காய் துருவல் மற்றும் 2பச்சை மிளகாய் எடுத்து கொள்ளவும்.
- 3
முதலில் ஊற வைத்த பச்சரிசியை மிக்சி ஜாரில் சேர்த்து சிறு ரவை பதத்தில் அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பரங்கிக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்து அதை அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் நன்றாக கலந்து கொள்ளவும்.
- 4
பின்னர் மாவில்,1/4ஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து மாவை மூடி வைத்து 1/2மணி நேரம் ஊற விடவும்.
- 5
பின்னர் மாவை நன்றாக மீண்டும் ஒருமுறை கலந்து தோசைக்கல் நன்கு சூடானவுடன் அடை வார்த்து அதன் மேல் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி மிதமான தீயில் மூடி 2நிமிடம் வேக விட்டு பின்னர் அடையை திருப்பி போட்டு 1நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.
- 6
இந்த அடையை தேங்காய் சட்னி, பட்டர், வெள்ளதூள் ஆகியவற்றுடன் பரிமாறவும். சுவை அழாதியாக இருக்கும். சத்தும் நிறைந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மொச்சை, பலாக்கொட்டை பரங்கிக்காய் தேங்காய் பால் கூட்டு.(mocchai koottu recipe in tamil)
#VK - koottuவித்தியாசமான கிராமீய சுவையுடன் கூடிய அருமையான கூட்டு... சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை முதலியவையுடன் சேர்த்து சாப்பிட செமையான சைடு டிஷ்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
புரதச்சத்து மிகுந்த அடை
#combo4 #comboஅடையில் அனைத்து வகையான பருப்புகள் சேர்க்க படுவதால் புரதச்சத்து மிகுந்து காணப்படுகிறது Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
பரங்கிக்காய் புளிக்கறி
செட்டிநாடு சமையலில் விருந்து, விசேஷங்களில் இந்த குழம்பு செய்வர் Azhagammai Ramanathan -
-
-
-
-
அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது Laxmi Kailash -
பரங்கிக்காய் சூப்/Pumpkin Soup🎃
#immunity #bookபரங்கிக்காயில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது.பரங்கிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
-
-
More Recipes
கமெண்ட்