குளுகுளு எம்மி அண்ட் ஹெல்த்தி தயிர்சாதம்

#combo4
வெயில் காலம் வந்துவிட்டாலே நாம் அனைவருக்கும் சாப்பிடத் தோன்றும் ஒரே உணவு தயிர் சாதம் தான்... தயிர் சாதத்தை தினமும் சாப்பிட்டாலும் சலித்து விடாது... அதுவும் வெயில் காலத்தில் சொல்லவே வேண்டாம்... உடம்புக்கு மிகவும் நல்லது. செய்முறையும் மிகவும் சுலபம் ..தயிர் சாதத்தில் நாம் கேரட் திராட்சை மாதுளம் பழம் போன்ற பழ வகைகளை கலந்து அதனை இன்னும் சத்துள்ளதாக மாற்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்... அவ்வாறான ஒரு சத்தான தயிர் சாதத்தை சுவைக்கலாம் வாங்க
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு டம்ளர் சாப்பாடு அரிசியை எடுத்து இரண்டு முறை நன்றாக தண்ணீரில் அலசி விட்டு அதில் அரிசி முழுகும் வரை தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சாதம் குழைந்து தயிர் சாதத்திற்கு ஏற்றவாறு வரும்
- 2
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நாம் ஊறவைத்த தண்ணீரை நன்றாக வடித்து விட்டு அதில் புதியதாக தண்ணீர் சேர்க்க வேண்டும் நாம் அளந்து எடுத்துள்ள ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்தால் தயிர் சாதத்திற்கு சரியாக இருக்கும் மூன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட வேண்டும்
- 3
4 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு உடனே குக்கரை திறக்கக்கூடாது ஒரு 15 நிமிடம் அப்படியே வைத்துவிட வேண்டும் 15 நிமிடம் கழித்து ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து பார்த்தால் சாதம் ரெடியாக இருக்கும்
- 4
தயிர் சாதம் என்பதால் சாதம் நன்றாக குழைந்து இருந்தால் அதன் சுவையை அதிகரிக்கும் அதனால் நாம் சாதம் சூட்டோடு இருக்கும்பொழுதே ஒரு கரண்டி வைத்து நன்றாக மசித்து விடவேண்டும்
- 5
மசித்த பிறகு நாம் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து விட்டு அதனுடன் 2 டம்ளர் கெட்டியான புளிப்பில்லாத தயிர் சேர்த்து அதனுடன் அரை டம்ளர் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்
- 6
இப்போது மிகவும் ருசியான தயிர் சாதம் தயார் இதனை நாம் தாளிக்க வேண்டும் அதற்கு ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் சூடானவுடன் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்
- 7
கடுகு பொரிந்தவுடன் அதில் அரை டேபிள் ஸ்பூன் உளுந்து அரை டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு அரை டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்
- 8
அடுத்ததாக அதில் 2 வரமிளகாய் இரண்டு பச்சை மிளகாய் ஒரு டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
- 9
பிறகு அதில் அரை டேபிள்ஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்க்க வேண்டும் தயிர் சாதத்தை இன்னும் சத்தானதாக மாற்ற அதில் ஒரு கப் அளவிற்கு கேரட் துருவலை சேர்க்க வேண்டும்
- 10
கேரட் துருவல் சிறிது நேரம் எண்ணெயில் வதங்கியவுடன் அதில் நாம் தயாராக வைத்திருக்கும் குழைவான தயிர் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்துவிட்டு அடுப்பை அணைத்து விடலாம்
- 11
அடுத்து தாளித்த தயிர் சாதத்தின் சுவையும் சத்தையும் இன்னும் அதிகரிக்க அதில் 10 நறுக்கிய பச்சை திராட்சை பழத்தை சேர்க்கவேண்டும்
- 12
இறுதியாக ஒரு கையளவு கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி தயிர் சாதத்தில் கலந்து நன்றாக கிளறி விட வேண்டும்
- 13
அவ்வளவு தான் மிகவும் குறைவான நேரத்தில் அதேசமயம் மிகவும் ஆரோக்கியமான எல்லாரும் விரும்பி சுவைக்கக் கூடிய அளவில் இருக்கும் சுவையான தயிர் சாதம் தயார் வாங்க சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பச்சரிசி தயிர் சாதம்


உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)


கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி


வெள்ளரிக்காய் தயிர் சாதம்(cucumber curd rice recipe in tamil)


பசும் தயிர் சாதம்


Curry Leaves Rice


எலுமிச்சை சாதம் (Lemon rice) 🍋


மாங்காய் சாதம்


மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)


பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)


மல்டி வெஜ் ரைத்தா (curd)


தேங்காய் சட்னி


தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)


பச்சை மோர் குழம்பு.(mor kuzhambu recipe in tamil)


புரதச்சத்து மிகுந்த அடை


தயிர் கொழுக்கட்டை (Thayir kolukkattai recipe in tamil)


ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)


தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)


தயிர் சேமியா(thayir semiya recipe in tamil)


சீஸ் பொட்டேடோ ஸ்டஃப்டு மசாலா தோசை


மல்டி க்ரேய்ன் அடை தோசை


தயிர் சாதம் / curd rice recipe in tamil


முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil)


இலந்தை வடை (ilanthai vadai recipe in Tamil)


மாங்காய் மல்லி சாதம்


*அரிசி தயிர் சேவை*(tayir sevai recipe in tamil)


கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil)


பரங்கிக்காய் அடை


பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)


கார பணியாரம் - (kaara paniyaram recipe in Tamil)

கமெண்ட்