தேவையான பொருட்கள்

2.30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 250 கிராம் மைதா
  2. 40 கிராம் + 1 டே ஸ்பூன் உப்பு இல்லாத வெண்ணெய்
  3. 120 மிலி + 4 டே ஸ்பூன் மீதமான சூடு பால்
  4. 4டே ஸ்பூன் +1 டீ ஸ்பூன் சீனி
  5. 1டீ ஸ்பூன் ஈஸ்ட்
  6. 2 முட்டை
  7. 50 கிராம் டூட்டி பிரூட்டி
  8. 25 கிராம் உலர் திராட்சை
  9. 10 கிராம் முந்திரி
  10. 1/2 கப் துருவிய தேங்காய்
  11. 1டே ஸ்பூன் பொடிச்ச சீனி
  12. 1/2டீ ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

2.30 நிமிடங்கள்
  1. 1

    தேங்காய் துருவல் கூட சீனி டூட்டி பிருட்டி

  2. 2

    திராட்சை,முந்திரி சேர்த்து கலந்து கொள்ளவும்

  3. 3

    பால் கூட ஈஸ்ட் மட்டும் சீனி சேர்த்து கலந்து 15 நிமிடம் நொதிக்க வைக்கவும்

  4. 4

    இப்படி நன்கு நொதித்து வர வேண்டும்

  5. 5

    மைதாவுடன் முட்டை,சீனி வெண்ணெய் சேர்க்கவும்

  6. 6

    கூடவே நொதித்த பால்,உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  7. 7

    இப்போம் கொஞ்சம் மாவு தட்டி அதில் கலந்து வைத்த மாவு வைத்து 15 நிமிடம் மாவை நன்கு இழுத்து பிசையவும்

  8. 8

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் மாவு வைத்து அதன் மேல் எண்ணெய் தடவி

  9. 9

    ஒரு ஈரமான துணி போட்டு மூடி 1 - 2 மணி நேரம் ப்ரூப் பண்ண விடவும்

  10. 10

    மாவு நன்கு பொங்கி உள்ளது இப்போம் நடுல ஒரு பஞ்ச் செய்யவும்

  11. 11

    மறுபடியும் மாவு தட்டி அதில் மாவு வைத்து 6 பாகமா பிரித்து கொள்ளவும்

  12. 12

    ஒரு பாலை எடுத்து திரட்டி கொள்ளவும்.படத்தில் கொடுத்த மாதிரி ஒரு பக்கம் கொடு போடவும்

  13. 13

    இப்போம் அதை மடித்து கொள்ளவும்.சைடு எல்லாம் அழுத்தி விடவும்

  14. 14

    தேங்காய் பில்லிங் நடுவில் வைத்து படத்தில் உள்ள மாதிரி மடித்து கொள்ளவும்

  15. 15

    பேக்கிங் ட்ரைல வெண்ணெய் மைதா பூசி வைக்கவும் அதில் இந்த பன் அடுக்கி வைத்து

  16. 16

    மேல ஈரமான துணி போட்டு ஒரு 30 நிமிடம் ப்ரூப் பண்ண வைக்கவும்

  17. 17

    நல்ல ப்ரூப் ஆகி உள்ளது

  18. 18

    இப்போம் பால் மற்றும் முட்டையை கலந்து வைத்து கொள்ளவும்

  19. 19

    அதை மேலே பிரஷ் செய்யவும்.சைடுல தேவை பட்ட எள்ளு தூவி

  20. 20

    15 நிமிடம் ப்ரீ ஹீட் பண்ணுன ஓவென்ல 30 நிமிடம் 180 செலிசியஸ் வைத்து பேக் பண்ணி எடுக்கவும்

  21. 21

    சுவையான கோகோநட் பன் தயார்
    மேலே வெண்ணெய் தடவவும்

  22. 22

    சூப்பர் சாப்ட்டான கோகோநட் பன் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes