டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)

Sowmya
Sowmya @vishalakshi

#bakingday
சில பொருட்களை விளம்பரங்களில் பார்த்தாலே சுவைக்க தோன்றும் அதில் ஒன்றுதான் இன்று நாம் சுவைக்க போகும் மிகவும் ருசியான சீஸி கார்லிக் பிரட்.... சுவைக்கலாம் வாங்க...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

90 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 125 கிராம் மைதா
  2. 10பல் பொடியாக நறுக்கிய பூண்டு
  3. 1 டேபிள் ஸ்பூன் இன்ஸ்டன்ட் ஈஸ்ட்
  4. 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு
  5. 3 டேபிள் ஸ்பூன் சக்கரை
  6. 2 டேபிள் ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  7. 2 டேபிள் ஸ்பூன் ஒரெகனொ ஃப்ளேக்ஸ்
  8. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  9. 4 டேபிள் ஸ்பூன் வெண்ணெெய்
  10. 2 டேபிள் ஸ்பூன் அளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை
  11. 5 டேபிள் ஸ்பூன் துருவிய சீஸ்
  12. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

90 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 125 கிராம் மைதா மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் இன்ஸ்டன்ட் ட்ரை ஈஸ்ட் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் சேர்க்கவேண்டும்

  2. 2

    அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் ஒரிகநோ பிளேக்ஸ் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்க்கவேண்டும்

  3. 3

    அதனுடன் 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பிறகு கையால் ஒருமுறை எல்லாவற்றையும் கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்

  4. 4

    மாவை நன்றாக கையால் அமுக்கி விட்டு பிசைய வேண்டும் மாவு உருண்டை மிகவும் மிருதுவாக இருக்க வேண்டும் ஒரு ஐந்து நிமிடம் முதல் 10 நிமிடம் வரை மாவை நன்றாக அழுத்தி விட்டு பிசைய வேண்டும் அப்போதுதான் மாவு மிருதுவாக இருக்கும்

  5. 5

    மாவு உருண்டை மிருதுவாக தயாரானவுடன் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவேண்டும் எண்ணெய் மாவின் எல்லாப்பக்கமும் படும்படி சேர்க்க வேண்டும் இவ்வாறு தெளிப்பதால் மாவு காய்ந்து போகாமல் இருக்கும் பிறகு ஒரு வெள்ளை துணியால் மூடி வைத்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்

  6. 6

    ஒரு மணி நேரம் கழித்து திறந்து பாருங்கள் நாம் பிசைந்து வைத்த மாவின் அளவு இரு மடங்காகி இருக்கும் இப்பொழுது நன்றாக மறுபடியும் கையை வைத்து அழுத்தி இரண்டு நிமிடம் மாவை பிசைய வேண்டும் பிறகு மாவை இரண்டு பாகமாக பிரித்துக் கொள்ளலாம்

  7. 7

    பிறகு அதிலிருந்து ஒரு உருண்டையை எடுத்து நாம் விரிக்க வேண்டும் அதற்கு சப்பாத்தி கட்டையில் சிறிதளவு மைதா மாவை தூவி விட்டு அதனுள் ஒரு உருண்டையை வைத்து நன்றாக விரிக்க வேண்டும் கார்லிக் பிரட் செய்வதற்கு கொஞ்சம் மொத்தமாக தான் விரிக்க வேண்டும் அதாவது சப்பாத்திக்கு விரிப்பதை விட மொத்தமாக இருந்தால்தான் கார்லிக் பிரட் மிகவும் ருசியாக இருக்கும் அதனால் கொஞ்சம் மொத்தமாக விரித்துக் கொள்ள வேண்டும்

  8. 8

    அடுத்து அதன் மேல் தடவுவதற்கு நாம் பட்டர் கார்லிக் பேஸ்ட் தயாரிக்க வேண்டும் அதற்கு 4 டேபிள்ஸ்பூன் வெண்ணைய் உருக்கி அதனுள் ஐந்து பல் பூண்டை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும் அதனுடன் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும் இது மூன்றையும் நன்றாக கலந்து விட்டு கொள்ள வேண்டும் பட்டர் கார்லிக் பேஸ்ட் தயார்

  9. 9

    இப்போது நாம் தயாரித்து வைத்துள்ள பட்டார் கார்லிக் பேஸ்ட்டிலிருந்து 3 டேபிள்ஸ்பூன் எடுத்து நாம் விரித்து வைத்துள்ள மாவில் சேர்க்க வேண்டும் சேர்த்து ஓரங்களை தவிர மற்ற எல்லா புறமும் படும்படி தடவ வேண்டும்

  10. 10

    அடுத்து அதன் மேல் நாம் சீஸ் துருவலை தூவ வேண்டும் அதற்கு 5 டேபிள்ஸ்பூன் சீஸ் துருவலை எடுத்து நாம் தடவி இருக்கும் பட்டர் கார்லிக் பேஸ்ட்டின் ஒருபுறமாக தூவவேண்டும்

  11. 11

    பிறகு அதன் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்க வேண்டும்

  12. 12

    பிறகு அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் ஒரிகநோ சேர்க்க வேண்டும்

  13. 13

    அடுத்து நம் கைகளால் சிறிதளவு தண்ணீர் எடுத்து நாம் விரித்து வைத்திருக்கும் மாவின் ஓரங்களில் எல்லாம் தேய்க்க வேண்டும் இவ்வாறு செய்வதால் நாம் மூடும் பொழுது ஓரங்கள் எல்லாம் நன்றாக ஒட்டிக் கொள்ளும். இப்போது நாம் விரித்து வைத்துள்ள மாவை ஒரு புறம் மேல் இன்னொரு புறம் படும்படி மூட வேண்டும் மூடிவிட்டு ஓரங்களை எல்லாம் நன்றாக ஒட்டி விட வேண்டும் பிறகு ஒரு கத்தி எடுத்து இடையிடையே சிறு கோடுகளாக மார்க்கிங் செய்ய வேண்டும்

  14. 14

    அடுத்து பட்டர் கார்லிக் பேஸ்ட் கலவையிலிருந்து ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து மேல்புறமாக எல்லா பக்கமும் படும்படி தடவ வேண்டும் அதன் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் ஒரு கேனோ சேர்த்து தூவவேண்டும்

  15. 15

    இப்போது நாம் எந்த பிளேட்டில் பிரெட் மாவை வேக வைக்கப் போகிறோமோ அந்த பிளேட்டில் சிறிதளவு வெண்ணையை தட்டு முழுவதும் படும்படி தடவிக் கொள்ள வேண்டும் தடவிவிட்டு நாம் தயாரித்து வைத்துள்ள பிரட் மாவை தட்டின் மேல் வைக்க வேண்டும்

  16. 16

    இப்போது நாம் பேக்கிங் செய்வதற்கு கனமான அடி உடைய பாத்திரத்தில் சிறிது தூள் உப்பை சேர்த்து அதன்மேல் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி வைத்து மிதமான சூட்டில் வைத்து 15 நிமிடம் சூடுபடுத்த வேண்டும்

  17. 17

    15 நிமிடம் சென்ற பிறகு நான் பேக்கிங் செய்ய ரெடியாக வைத்துள்ள பிரட் மாவை தட்டோடு எடுத்து அந்த பேண்டின் மேல் வைக்கவேண்டும் வைத்துவிட்டு பாத்திரத்தின் மேல் மூடி வைத்து சரியாக 30 நிமிடம் வேகவிட வேண்டும்

  18. 18

    30 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு திறந்து பாருங்கள் மிகவும் மிருதுவான ருசியான சீஸி கார்லிக் பிரட் சுட சுட தயார் நாமும் சாப்பிட தயாராகலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes