பிளாக் சன்னா வடை

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 200கிராம் கருப்பு கொண்டை கடலை
  2. 3காய்ந்த மிளகாய்
  3. 2பெரிய வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 12பல் பூண்டு
  6. ஒரு ஸ்பூன் சோம்பு
  7. தேவையான அளவு உப்பு
  8. தேவையான அளவுதண்ணீர்
  9. பொரிப்பதற்கு சமையல் எண்ணெய்
  10. ஒரு கொத்து கறிவேப்பிலை
  11. ஒரு கொத்து கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கருப்பு கொண்டை கடலையை கல் இல்லாமல் சுத்தம் செய்து கழுவி தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை 6 பல் பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்

  3. 3

    மிக்ஸி ஜாரில் ஊறவைத்து கொண்டைகடலை 6 பல் பூண்டு தோலுடன் காய்ந்த மிளகாய் சோம்பு தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்

  4. 4

    அரைத்த கலவையில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை கருவேப்பிலை சேர்த்து மாவை கெட்டியாக பிசையவும்

  5. 5

    சிறு சிறு உருண்டைகளாக மாவை உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்திவிடவும்

  6. 6

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து காய்ந்ததும் வடைகளை போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் சூப்பரான ஹெல்தியான கருப்பு கொண்டைக்கடலை வடை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes