சமையல் குறிப்புகள்
- 1
செவ்வாழை பழத்தை தோல் உறித்து சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். அடுப்பில் ஒரு அடிகனமான கடாயை வைத்து அதில் 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நெய் உருகியதும் அதில் நறுக்கிய செவ்வாழைப்பழம் சர்க்கரை சேர்த்து நன்றாக மசித்துக்கொண்டே கலந்துவிடவும்.
- 2
அடுப்பு Simலேயே இருக்கட்டும். இடைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை சுருண்டு வரும்போது 1/2 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கவும். சூடு ஆறிய பிறகு கண்ணாடி காகிதத்தில் ஒரு ஸ்பூன் வைத்து மடித்து வைக்கவும்.சிறிது நேரம் ப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடவும். இது மிகமிக சுவையாக இருக்கும். செவ்வாழை மணத்துடன் அருமையாக இருக்கும். அடுத்து ஏதாவது நாம் சாப்பிடும் வரை அதன் சுவை நாக்கில் இருக்கும்.
- 3
நீங்களும் செய்து சுவைத்து பாருங்கள்
நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15033267
கமெண்ட்