தாபா ஸ்டைல் டேஸ்டி‌ பாயாசம்

Sowmya
Sowmya @vishalakshi

#combo5
பொதுவாக விருந்து என்றாலே அதில் பாயாசம் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும்...அதிலும் வடையும் பாயாசமும் சேர்த்து இரட்டையர்கள் ஆகவே பங்கு பெறுவார்கள் ..பாயாசம் செய்வது மிகவும் எளிது தான்.. அதிலும் தாபாக்களில் கிடைக்கும் பாயாசம் தனிச்சுவை தரும்.. இப்போது மிகவும் சுவையான டேஸ்டியான தாபா ஸ்டைல் பாயாசத்தை சமைக்கலாம் வாங்க

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 5 டம்ளர் காய்ச்சிய பால்
  2. 1/2 டம்ளர் சக்கரை
  3. 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  4. 1/4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா
  5. 5 டேபிள் ஸ்பூன் நெய்
  6. 10 முந்திரிப் பருப்பு
  7. 10பாதாம் பருப்பு
  8. 10 பிஸ்தா பருப்பு
  9. 10உலர்ந்த திராட்சை
  10. 1 டம்ளர் சேமியா
  11. 1/2 டம்ளர் நாட்டுச் சக்கரை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பொதுவாக தாபாவில் செய்யும் பாயாசம் களில் கண்டன்ஸ்டு மில்க் சேர்ப்பார்கள் எனவே நாம் தாபா ஸ்டைலில் பாயாசம் செய்வதற்கு முதலில் கண்டன்ஸ்டு மில்க் நாம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம் அதற்கு முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் காய்ச்சி ஆற வைத்த பாலை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் அரை டம்ளர் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்றாக கலக்கி விட்டு கொள்ள வேண்டும்

  2. 2

    அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து வெண்ணெய் பாலில் நன்றாக உருகியதும் கால் டேபிள்ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும்

  3. 3

    தொடர்ந்து கலக்கிவிட்டு கொண்டே இருக்கவேண்டும் ஒரு ஐந்து நிமிடம் கழித்து நாம் சேர்த்துள்ள எல்லாம் நன்றாக கொதித்த பிறகு பாலின் கலர் சிறிதாக மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும்

  4. 4

    மேலும் ஒரு இரண்டு நிமிடம் நன்றாக கலக்கி விட்டு கொண்டே இருந்தால் பாலின் கலரும் முழுவதுமாய் மஞ்சள் நிறமாக மாறிவிடும் அதேபோல் பாலும் நன்றாக கெட்டியாக மாறி கண்டன்ஸ்டு மில்க் தயாராகிவிடும்

  5. 5

    அடுத்து ஒரு கடாயில் 5 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி நெய் சூடானவுடன் அதில் நறுக்கிய பத்து முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கிய பாதாம் பருப்பும் சேர்த்து கலக்க வேண்டும்

  6. 6

    அடுத்து அதில் 10 பொடியாக நறுக்கிய பிஸ்தா பருப்பையும் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும் பிறகு அதில் பத்து உலர்ந்த திராட்சையை சேர்க்கவேண்டும்

  7. 7

    திராட்சை நெய்யில் வதங்கி பலூன் போல் ஊதியதும் நாம் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்

  8. 8

    பிறகு அதே கடாயில் மீதமிருக்கும் நெய்யில் நாம் ஒரு டம்ளர் சேமியாவை சேர்த்து நன்றாக வதக்கவும்

  9. 9

    சேமியாவின் நிறம் பிரவுன் கலராக மாறும் வரை வதக்கவும்

  10. 10

    பிறகு வேறு ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து அதனுள் நாம் நெய்யில் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்த்து சேமியாவை நன்றாக வேக வைக்க வேண்டும்

  11. 11

    ஒரு ஐந்து நிமிடத்தில் சேமியா முழுவதும் நன்றாக பாலில் கொதித்து வெந்து இருக்கும்

  12. 12

    இந்த சமயத்தில் நாம் செய்துள்ள கண்டன்ஸ்டு மில்க் ஐ 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்

  13. 13

    பிறகு அரை டம்ளர் நாட்டுச்சக்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும்

  14. 14

    அடுத்து அதில் நாம் நெய்யில் வதக்கி எடுத்து வைத்திருக்கும் பாதாம் முந்திரி பிஸ்தா உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்

  15. 15

    பிறகு மேலும் காய்ச்சி ஆற வைத்த 2 டம்ளர் பாலை நாம் அதில் சேர்த்து நன்றாக எல்லாவற்றையும் கலந்து விட்டு 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்

  16. 16

    இரண்டு நிமிடம் எல்லாம் சென்று சேர்ந்து நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடலாம் இதோ மிகவும் சுவையான தாபா ஸ்டைல் டேஸ்டி பாயாசம் தயார்...மசால் வடையும் பாயாசமும் சேர்த்து சாப்பிட்டால் ஆஹா சூப்பர் காம்பினேஷன் தான்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes