தயிர் சாதம் வித் மாங்காய் தாளிப்பு

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#combo5
தயிர் சாதம் மிகவும் எளிமையான உணவாக இருந்தாலும் வெயிலுக்கு ஏற்றது மற்றும் சத்துள்ளது அதனுடன் மாங்காய் தாளிப்பு மிகவும் பொருத்தமான கூட்டணியாக இருக்கும்

தயிர் சாதம் வித் மாங்காய் தாளிப்பு

#combo5
தயிர் சாதம் மிகவும் எளிமையான உணவாக இருந்தாலும் வெயிலுக்கு ஏற்றது மற்றும் சத்துள்ளது அதனுடன் மாங்காய் தாளிப்பு மிகவும் பொருத்தமான கூட்டணியாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. ஒரு கப்முந்தன நாள் மீந்த சாதம்
  2. கால் கப்தயிர்
  3. அரை கப்காய்ச்சி ஆறிய பால்
  4. தேவையான அளவுஉப்பு
  5. மாங்காய் தாளிப்பு
  6. ஒன்று மாங்காய்
  7. சிறிதளவுபெருங்காயத்தூள்
  8. அரை ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  9. தேவையான அளவுதூள் உப்பு
  10. தாளிப்பதற்கு
  11. கடுகு
  12. இஞ்சி துருவியது
  13. 1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  14. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    மீந்த சாதத்தை இட்லி பாத்திரத்தில் நீர் நிரப்பி அதற்குள் ஒரு பாத்திரத்தில் வைத்து நன்றாக சூடுபடுத்தவும் பின்னர் அதை நன்றாக குழிக்கரண்டி இன் உதவிகொண்டு குறைத்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் பால் சேர்க்கவும். ஆறியவுடன் தயிர் சேர்த்து நன்றாக குழைத்து மூடி விடவும் பின்னர் சாப்பிடப் போகும் நேரத்திற்கு ஒரு வாணலியில் அரை குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை துருவிய இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி தயிர் சாதத்தில் கொட்டி நன்றாக கிளறி எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    மாங்காய் தாளிப்பு செய்வதற்கு முதலில் மாங்காயை தோல் உடனேயே நன்றாக பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும் பின்னர் ஒரு வாணலியில் ஒரு குழிக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சிறிதளவு சேர்க்கவும்

  3. 3

    அதன் பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள மாங்காய் அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் அரை ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    மாங்காய் நன்றாக வதங்க வேண்டும் என்ற அவசியமில்லை பாதி அளவு மிருதுவாக வதங்கியவுடன் அடுப்பை அணைத்து விடவும் தயிர் சாதத்தை தாளித்து இந்த மாங்காய் வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes