தயிர் சாதம்(curd rice recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#LB

நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது மாணவ மாணவியர்கள் தயிர் சாதம்தான் டிஃபன் பாக்ஸில் கொண்டுவருவார்கள் . கோடைக்காலத்தில் அது தான் தேவாமிர்தம். காய் கறிகள் ; பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தாளித்த சுவையான தயிர் சாதம். அம்மா தத்தியோதனம் என்று சொல்வார்கள். பாட்டி பக்காளா பாத் (கன்னடம்) என்று சொல்வார்கள், #LB

தயிர் சாதம்(curd rice recipe in tamil)

#LB

நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது மாணவ மாணவியர்கள் தயிர் சாதம்தான் டிஃபன் பாக்ஸில் கொண்டுவருவார்கள் . கோடைக்காலத்தில் அது தான் தேவாமிர்தம். காய் கறிகள் ; பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தாளித்த சுவையான தயிர் சாதம். அம்மா தத்தியோதனம் என்று சொல்வார்கள். பாட்டி பக்காளா பாத் (கன்னடம்) என்று சொல்வார்கள், #LB

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் பொன்னி அரிசி
  2. ¼ கப் ஜவ்வரிசி
  3. 4 கப் கட்டி தயிர்
  4. 2 மேஜைகரண்டி சிகப்பு வெங்காயம்,மெல்லியதாக சீவியது
  5. 1/4 கப் பச்சை குடை மிளகாய்
  6. 1/4 கப் மஞ்சள் குடை மிளகாய்
  7. 1/4 கப் சிகப்பு குடை மிளகாய்
  8. 1 தேக்கரண்டி இஞ்சி, தோலுரித்து நசுக்கியது
  9. ½கப் வெள்ளரி துருவியது
  10. தேவையானஉப்பு
  11. ½ கப் சூடான பால்
  12. தாளிக்க:
  13. 1 மேஜைகரண்டி நல்லெண்ணை
  14. 1 மேஜைகரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கியது
  15. 1 தேக்கரண்டி சீரகம்
  16. 1 தேக்கரண்டி கடுகு
  17. ½தேக்கரண்டி பெருங்காய பொடி
  18. ¼தேக்கரண்டி வெந்தியபொடி
  19. 1பச்சை மிளகாய், துண்டாக்கியது(ஆப்ஷனல்)
  20. 20 கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க

  3. 3

    ஒரு கிண்ணத்தில் அரிசி, ஜவ்வரிசி 4 கப் நீர் சேர்த்து பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க. வெந்த பின் வெளியே எடுத்து ஆற வைக்க..இஞ்சி. காய்கறிகள், தயிர், உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

  4. 4

    தாளிக்கை; இதுதான் தத்தியோனத்திர்க்கு தனி ருசி கொடுக்கிறது மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸாஸ்பேனில் சூடான எண்ணையில் கடுகு பொறிக்க. பின் சீரகம். பிஞ்சு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வறுத்துக்கொள்ளுங்கள். பெருங்காயம் சேர்க்க, 1 நிமிடம். அடுப்பை அணைக்க. தாளித்த பொருட்களை கலந்த சாதத்துடன் சேர்க்க. தயிர் சாதம்
    தயார். 1/2 கப் சூடான பால் சேர்க்க, லஞ்ச் பாக்ஸில் வைக்கு முன், தயிர் புளி க்காமல் இருக்கும். ஊறுகாய், தயிர் சாதம் ருசியான காம்போ. சுவைக்க. லஞ்ச் பாக்ஸில் வைக்க

  5. 5

    டிப்ஸ்: வெள்ளரி துருவல் சேர்ப்பதற்க்கு முன், கையால் பிழிந்து விடுக; தயிர் நீர்த்து போகாது. நீரை குடித்தால் வெயலுக்கு இதமாக இருக்கும். 1/2 கப் சூடான பால் சேர்க்க, லஞ்ச் பாக்ஸில் வைக்கு முன், தயிர் புளி க்காமல் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes