சேலம் வெஜ் எஸ்சென்ஸ் தோசை

#vattaram #Week6 #salem
சேலத்தில் செய்யப்படும் எஸ்சென்ஸ் தோசையை நானும் குக்பேடுக்காக செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது. என் குழந்தைகள் சுவைத்து சாப்பிட்டார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
மசாலா அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் கொஞ்சம் கொரகொரப்பாக நீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியை சூடாக்கி எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும். பின்பு தக்காளியை சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
பிறகு மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள்தூள் சேர்த்து அதிக தீயில் எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கி ஒரு வடிகட்டியில் எண்ணெயை வடித்து வைத்துக் கொண்டு மீண்டும் வெங்காய கலவையை வாணலியில் போடவும். பின்பு ஒரு டம்ளர் நீர் விட்டு ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
பின்பு அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து 2 டம்ளர் நீர்விட்டு அதிக தீயில் 5 அல்லது 6 நிமிடம் கொதிக்கவிடவும். இப்பொழுது நன்கு அடர்த்தியான எஸ்சென்ஸ் குழம்பு தயாராகி இருக்கும். எஸ்சென்ஸ் மீது வடித்து வைத்துள்ள எண்ணெய் சுற்றி ஊற்றவும்.
- 5
தோசைக்கல்லை சூடாக்கி தோசை மாவை மெலிதாகவும் அடர்த்தியாகவும் இல்லாமல் மீடியம் அடர்த்தியில் தோசை வார்க்கவும். சுற்றி எண்ணெய் விட்டு சிவக்க வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். அதன்மேல் எஸ்சென்ஸ் குழம்பை வட்டவடிவில் ஊற்றி பரிமாறவும்.
- 6
பின்குறிப்பு: சேலத்தில் இந்த எஸ்ஸென்ஸ் குழம்பை இரும்பு வாணலியில் செய்வார்கள். அதனால் சற்று கருப்பாக குழம்பு இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)


வெஜ் எசன்ஸ் தோசை


எசன்ஸ் தோசை


எசன்ஸ் தோசை


வெஜ் சால்னா


Essence dosa


சேலம் ஸ்பெஷல் எசேன்ஸ் தோசை


சேலம் சால்னா


எசன்ஸ் தோசை


சேலம் ஸ்பெஷல் வெஜ் சால்னா


காளான் கிரேவி (Mushroom Gravy)


Butter Chicken Green curry (Butter Chicken Green curry recipe in tamil)


மட்டன் சுக்கா பிரியாணி


சால்னா


சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil)


வடைகறி (Vadai curry recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா


மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai Recipe in Tamil)


கமகமக்கும் பிளைன் சால்னா (plain salna recipe in tamil)


மதுரை கறி தோசை


சால்னா


வெள்ளை வெஜ் குருமா


எசென்ஸ் தோசை


கீ ரைஸ்


* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)


* கரம் மசாலா தூள்*(garam masala powder recipe in tamil)


பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)


வெஜ் ஹைத்திராபாடி நிஜாம் ஹண்டி (Veg hyderabadi nizam handi recipe in tamil)


வெஜிடபிள் குருமா (Vegetable kuruma recipe in tamil)

கமெண்ட் (2)