எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1கப் தேங்காய் துருவல்
  2. 1தக்காளி
  3. 1 பெரியவெங்காயம்
  4. 2பச்சைமிளகாய்
  5. 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  6. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 2 ஸ்பூன் மல்லித்தூள்
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  9. 1/4 ஸ்பூன் கடுகு
  10. 1/2 ஸ்பூன் சோம்பு
  11. 1/2 ஸ்பூன் சீரகம்
  12. 1 ஸ்பூன் பொட்டுக்கடலை
  13. 2 ஸ்பூன் நிலக்கடலை
  14. 1/4 ஸ்பூன் மிளகு
  15. 1/4 ஸ்பூன் கசகசா
  16. 2பட்டை
  17. 3கிராம்பு
  18. 2 ஸ்பூன் எண்ணெய்
  19. ஒரு கொத்து புதினாஇலைகள்
  20. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    தேங்காய் துருவல், சோம்பு, சீரகம், கசகசா,மிளகு, பொட்டுக்கடலை, நிலக்கடலை, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நைசாக அரைக்கவும்.

  3. 3

    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, கடுகு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் நன்கு வதங்கியதும் புதினாவை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  5. 5

    பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் எண்ணெயிலேயே வதக்கவும்.

  6. 6

    பிறகு அதில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் ஊற்றி ஒரு நிமிடம் வதக்கி 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பிறகு பரிமாறவும்.

  7. 7

    சுவையான சேலம் ரோட்டுக்கடை சால்னா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes