ஊத்தப்பம் ஒரு ஆரோக்கியமான முழு உணவு

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#cookerylifestyle
எல்லாரும் விரும்பும் உணவு, காலை, மதியம், மாலை, எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். “உணவே மருந்து” எனவே நல்ல நலம்தரும் உணவு பொருட்களை சேர்த்து நல்ல முறையில் சமையல் செய்ய வேண்டும்.  பூச்சி மருந்து உபயோகிக்கமல் வளர்த்த காய் கறிகளை உணவில் சேர்ப்பது அவசியம் மஞ்சள், பெருங்காயம் கேடு விளைவிக்கும் வைரஸ், microorganisms, pathogens எல்லாவற்றையும் கொல்லும்.   மஞ்சள், இஞ்சி, தக்காளி, மஷ்ரூம் புற்று நோய் தடுக்கும் எளிய முறையில் பண்ணிய சுவையான சத்து நிறைந்த ஊத்தப்பம்,

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. ஊத்தப்ப மாவு:
  2. 2 கப் அரிசி மாவு
  3. 1/4கப் ரவை
  4. 1/4கப்ராகி மாவு
  5. 1/4கப் உளுந்தம் மாவு
  6. ¼கப் க்ரஷ்ட் வால்நட்
  7. 1மேஜைகரண்டி ஈஸ்ட் (yeast) புளிக்க
  8. தாளிக்க:
  9. 1தேக்கரண்டி கடுகு
  10. 1தேக்கரண்டி சீரகம்
  11. 1மேஜைகரண்டி உளுந்து
  12. சிட்டிகை பெருங்காயம்
  13. 6மோர் மிளகாய் (விரும்பினால்)
  14. ¼கப் கறிவேப்பிலை
  15. காய்கறிகள்:
  16. ¼ கப் வெங்காயம், சின்ன சின்ன துண்டாக நறுக்கியது
  17. 1/2கப் தக்காளி துண்டாக நறுக்கியது,
  18. 1/2அவகேடோ நறுக்கியது(avacado)
  19. ½கப் பச்சைபட்டாணி+கேரட் ஃபிரெஷ் அல்லது frozen
  20. 2பச்சை மிளகாய் நறுக்கியது
  21. ¼ கப் காளான் நறுக்கியது
  22. 1தேக்கரண்டி இஞ்சி, துருவியது
  23. 1தேக்கரண்டி பூண்டு, துருவியது
  24. ¼கப் கொத்தமல்லி பொடிபொடியாக நறுக்கியது
  25. 1 கப் தயிர்
  26. தேவையான அளவுஉப்பு
  27. தேவையானதுநல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    செக் லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்,

  2. 2

    தேவையான பொருட்களை முன் கூட்டியே சேகரித்து ரெடியாக வைத்து கொள்ளுங்கள்,

  3. 3

    மாவு புளிக்க வேண்டும். வால்நட், ரவை மாவுகளுடன் சேர்த்து நன்றாக கிளருங்கள். 2 கப் நீர், தயிர், ஈஸ்ட் கலவை சேர்த்து விஸ்க் செய்க.
    4 மணி நேரத்தில் புளித்து விடும். பின் காய்கறிகள், இஞ்சி, பூண்டு, சேருங்கள். தேவையான நீர், உப்பு சேர்க்க. விஸ்க் செய்க.மாவு தண்ணியாகவோ, கெட்டியாகவோ இருக்க கூடாது. லம்பஸ் இருக்க கூடாது. இட்லி மாவு பதத்திரக்கு இருக்கவேண்டும்.

  4. 4

    வாணலியை மிதமான நெருப்பின் மீது வைத்து 1 மேஜைகரண்டி நல்லெண்ணெய் சூடானஉடன் கடுகு போடுங்கள். வெடித்தவுடன் (1 நிமிடம்) மீதி தாளிக்க வேண்டிய பொருட்களை சேருங்கள்--2 நிமிடம். தாளித்த பொருட்களை மாவு கலவையோடு சேருங்கள். மஞ்சள் பொடி சேர்க்க. தேவையான உப்பு சேர்த்தால் நீங்கள் ஊத்தப்பம் வாணலியில் செய்ய தயார்
    எப்பொழுதும் மிதமான நெருப்பே உபயோகியுங்கள். 1 தேக்கரண்டி எண்ணை ஊற்றி துடுப்பால் தேயுங்கள். 2 கப் மாவை ஊற்றி கரண்டியால் வட்டமாக ஊத்தப்பம் பண்ணுங்கள். மேலெ 1 தேக்கரண்டி எண்ணை பரவலாக ஊற்றி வாணலியை மூடுங்கள

  5. 5

    வெந்த பின் வாசனை வரும். திருப்பி போட்டு மூடிவையுங்கள் 2 நிமிடம், ஒரு ஊத்தப்பம் செய்ய 6 நிமிடம் ஆகலாம். சமைக்கும் நேரம் அடுப்பைப் பொருத்தது. சைஸ் (size) பொருத்து 10 ஊத்தப்பம் செய்யலாம்.2 பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும் ருசிக்க. விந்து பார்த்தால் ஸ்பான்ஜ் போல இருக்கும் விருப்பமான சட்னியோடு பரிமாறுங்கள். நான் தேங்காய் கலந்த புதினா சட்னியோடு பரிமாறினேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes