வாழைக்காய் பொடிமாஸ்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும்.

வாழைக்காய் பொடிமாஸ்

இந்த பொடிமாஸின் ஹைலைட்டே இதில் போட்டிருக்கும் பொடி தான்.இதை தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையும்,மணமும் கூடும்.நான் இதனை அடிக்கடி செய்வேன். சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.நெய்தான் நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
6பேர்
  1. 4வாழைக்காய்
  2. 2ஸ்பூன்க.பருப்பு
  3. 2ஸ்பூன் உ.பருப்பு
  4. 1ஸ்பூன்தனியா
  5. 10மிளகாய்
  6. 1ஸ்பூன்பச்சரிசி
  7. 1 ஆர்க்குகறிவேப்பிலை
  8. 4டேபிள்ஸ்பூன்தே.எண்ணெய்
  9. 1டீஸ்பூன்கடுகு
  10. 1/2டீஸ்பூன்ம.தூள்
  11. 1ஸ்பூன் காஷ்மீரி மி.தூள்
  12. உப்பு ருசிக்கு
  13. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    வெறும் கடாயில் தனியா,க.பருப்பு,உ.பருப்பு,மிளகாய்,பச்சரிசி,கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வறுத்ததை ஆறினதும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் வாழைக்காயை தோல் சீவி இரண்டு துண்டுகளாக வெட்டி தேவையான தண்ணீர் ஊற்றி அதில் உப்பு,ம.தூள் போட்டு மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் குழையக் கூடாது. வெந்த வாழைக்காயை தட்டில் போட்டு ஆறவிடவும்.

  4. 4

    ஆறவைத்த வாழைக்காயை மசித்துக் கொள்ளவும்.கடாயில் தே.எண்ணெய் காய்ந்ததும் கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்ததும் ம.தூள்,காஷ்மீரி மி.தூள் உப்பு,கறிவேப்பிலை போடவும்.பிறகு மசித்த வாழைக்காயை போட்டு நன்கு ஒன்று சேர கிளறவும்.

  5. 5

    கிளறினதும் வறுத்த பொடியை மேலே போடவும்.5நிமிடம் அடுப்பில் வைத்து கிளறினதும் இறக்கி விடவும்.

  6. 6

    சுவையான,மணமான,*வாழைக்காய்
    பொடிமாஸ்*,தயார்.செய்து பார்த்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes