சுவையான மட்டன் கிரேவி(mutton gravy)🍗🍗👌👌

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#kavitha
ருசியான மட்டன் கிரேவி🍖🍖 செய்ய முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,சோம்பு, கிராம்பு,பிரிஞ்சி இலை, ஏலக்காய்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம்,தக்காளி அனைத்தையும் நன்கு வதக்கி கொள்ளவும். பின் அதனுடன் இஞ்சி,பூண்டு, சிறிய வெங்காயம் பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிய பின் அதனுடன் மட்டன் சேர்த்து வதக்கி விடவும். பின் கரம் மசாலா,குழம்பு மசாலா தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி குக்கரை மூடி போட்டு 3 முதல் 4 விசில் விட்டு இறக்கவும். நமது சுவையான மட்டன் கிரேவி தயார்👍👍

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  1. 4 ஸ்பூன்சமையல் எண்ணெய்
  2. தேவைக்கேற்ப பட்டை,கிராம்பு,சோம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், அண்ணாச்சி மொக்கு அனைத்தும்
  3. 100 கிராம்இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம் பேஸ்ட்
  4. 1பெரிய வெங்காயம்
  5. தேவையான அளவுகறிவேப்பிலை
  6. 3பச்சை மிளகாய்
  7. தேவையான அளவுஉப்பு
  8. 1 டீஸ்பூன்கரம் மசாலா
  9. 2 டீஸ்பூன்குழம்பு மசாலா தூள்
  10. 3தக்காளி
  11. 1 கிலோமட்டன் (ஆட்டுக்கறி)

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மட்டனை நன்கு தண்ணீரில் கழுவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    பின் இஞ்சி, பூண்டு சிறிய வெங்காயம் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் அரைத்து பேஸ்ட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். குக்கரை அடுப்பில் வைத்து சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

  3. 3

    குக்கரில் எண்ணெய் சூடானதும் பட்டை, சோம்பு,கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் போட்டு வாசனை வர வதக்கி விடவும். பின் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக நன்கு எண்ணெயில் வதக்கி விடவும்.

  4. 4

    பின் அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி விடவும்.தக்காளி நன்கு வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு, சிறிய வெங்காயம் பேஸ்ட் சேர்த்து வதக்கி விடவும்.

  5. 5

    இஞ்சி, பூண்டு,வெங்காயம் பேஸ்ட் நன்கு பச்சை வாசனை போக எண்ணெயில் வதக்கி விடவும். பின் கரம் மசாலா, குழம்பு மசாலா தூள்,எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    பின் கரம் மசாலா, குழம்பு மசாலா தூள் இரண்டையும் எண்ணெயில் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

  7. 7

    பின் கழுவி எடுத்து வைத்துள்ள ஒரு கிலோ மட்டனை குக்கரில் உள்ள கலவைகள் உடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். மட்டனை நன்கு கலந்து விட்டு அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.

  8. 8

    பின் மட்டனை வேக வைக்க தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அனைத்தையும் நன்கு கலந்து ஒரு கொதி விடவும். பின் குக்கர் மூடி போட்டு 3 முதல் 4 விசில் வரை விடவும்.

  9. 9

    குக்கரில் விசில் வந்து முடிந்தவுடன் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி மட்டன் கிரேவியை ஒரு கிளறு கிளறி விட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.

  10. 10

    நமது சுவையான சூப்பரான👌👌👌👌மட்டன் கிரேவி தயார்🤗வீட்டில் உள்ள அனைவருக்கும் சைட் டிஷ் ஆக பரிமாறி மகிழுங்கள்👍 நன்றி😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
அன்று

Similar Recipes