லெமன் ரைஸ் 🍋

Kalaiselvi
Kalaiselvi @cook_26869145

இந்த ரெசிப்பி நானாகவே செய்ததுதான். எலுமிச்சை பழம் நம் உடலில் சேர்ப்பதனால் பல நன்மைகள் உண்டாகும் .நம் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு.

லெமன் ரைஸ் 🍋

இந்த ரெசிப்பி நானாகவே செய்ததுதான். எலுமிச்சை பழம் நம் உடலில் சேர்ப்பதனால் பல நன்மைகள் உண்டாகும் .நம் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேர்
  1. 2 கப் ஊற வைத்து வேக வைத்த வெள்ளை சாதம்
  2. 2 எலுமிச்சை பழம் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்
  3. 1 ஸ்பூன் கடுகு
  4. 1 ஸ்பூன் உளுந்து
  5. 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  6. 5 ஸ்பூன் வேர்க்கடலை
  7. 2 ஸ்பூன் உப்பு
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. சிறிதளவுபெருங்காயத்தூள்
  10. 1 துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
  11. 2பச்சை மிளகாய் நறுக்கியது
  12. சிறிதளவுகருவேப்பிள்ளை
  13. சிறிதளவுகொத்தமல்லி
  14. 2காய்ந்த மிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் நாம் லெமன் ரைஸ் செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கடலைப்பருப்பு வேர்க்கடலை சேர்த்து சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

  3. 3

    அதில் நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் 2 காய்ந்த மிளகாய் கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.

  4. 4

    பிறகு நாம் எடுத்து வைத்திருந்த எலுமிச்சை பழச்சாறு, உப்பு சேர்த்து இரண்டு கொதி வரவும் அடுப்பை அனைத்து. நம் வடித்து வைத்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி வைத்தால் லெமன் ரைஸ் ரெடி..

  5. 5

    அருமையான எலுமிச்சை பழ சாதத்துடன் மாம்பழம் மற்றும் ஊறுகாய் சேர்த்து சாப்பிட்டால்மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kalaiselvi
Kalaiselvi @cook_26869145
அன்று

Similar Recipes