பால்கோவா.(கிருஷ்ணகிரி)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#vattaram8
இது எனது 50வது ஸ்பெஷல் ரெசிபி.ஸ்பெஷல் என்பதால் ,* பால்கோவா*, செய்தேன்.பாலுடன்,வறுத்த ரவை,குங்குமப்பூ,பாதாம்,முந்திரி சேர்த்து செய்ததால் இது ஸ்பெஷல் பால்கோவா ஆகும்.பாலுடன்,வறுத்த ரவை சேர்த்து செய்யலாமே என்று தோன்றியதால் இதனை செய்தேன்.மிகவும் டேஸ்டாக இருந்தது.

பால்கோவா.(கிருஷ்ணகிரி)

#vattaram8
இது எனது 50வது ஸ்பெஷல் ரெசிபி.ஸ்பெஷல் என்பதால் ,* பால்கோவா*, செய்தேன்.பாலுடன்,வறுத்த ரவை,குங்குமப்பூ,பாதாம்,முந்திரி சேர்த்து செய்ததால் இது ஸ்பெஷல் பால்கோவா ஆகும்.பாலுடன்,வறுத்த ரவை சேர்த்து செய்யலாமே என்று தோன்றியதால் இதனை செய்தேன்.மிகவும் டேஸ்டாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

11/2மணி
6பேர்
  1. 1லிட்டர்ஆவின் பால்
  2. 2டேபிள்ஸ்பூன் வறுத்த ரவை
  3. 150கிசர்க்கரை
  4. 2டேபிள்ஸ்பூன்நறுக்கின பாதாம்,முந்திரி
  5. 1சிட்டிகைகுங்குமப்பூ
  6. 2டேபிள்ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

11/2மணி
  1. 1

    அடிகனமான கடாயில் 1ஸ்பூன் நெய்விட்டு உருகினதும் முந்திரி,பாதாமை வறுத்துக் கொள்ளவும்.குங்குமப்பூவை சிறிது பாலில் கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வறுத்த அதே கடாயில் 1லி பாலில் தண்ணீர் சிறிதும் சேர்க்காமல் காய்ச்சவும்.பால் காய்ந்து பொங்கி வரும் போது ஓரத்தில் படிந்துள்ள ஆடைகளை சேர்த்து கைவிடாமல் காய்ச்சவும்.

  3. 3

    அடுப்பை சின்னத்தில் வைத்து ரவையை போடவும். கட்டிதட்டாமல் நன்கு கிளறவும்.பாலும், ரவையும் சேர வேகவிடவும்.

  4. 4

    சிறிது வெந்ததும் சர்க்கரையை போடவும்.சர்க்கரை கரைந்து கொதிக்கவிடவும்.நெய் சிறிது விடவும்.

  5. 5

    நெய் உருக்கி சிறிது கெட்டியானதும் வறுத்த பாதாம்,முந்திரியை போட்டு கைவிடாமல் கிளறவும்.பிறகு பாலில் கரைத்து வைத்த குங்குமப்பூவை போடவும்.கெட்டியாகும் வரை கிளறவும்.

  6. 6

    கொஞ்சம் தளர இருக்கும் போதே அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு தட்டில் நெய் தடவி கொட்டி ஆறவிடவும்.ஆறினதும் உங்களுக்கு விருப்பமான முறையில் அலங்காரம் செய்யவும்.

  7. 7

    வித்தியாசமான,சுவையான,*பால்கோவா*,தயார். செய்து பார்த்து அசத்தவும்.*இது எனது ஸ்பெஷல் 50வது ரெசிபி*.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

கமெண்ட் (2)

Similar Recipes