வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

மோர் பிடிக்காதவர்கள் கூட இந்த மோர் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
6 பேருக்கு
  1. 200கிராம் கெட்டித்தயிர்
  2. 4 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  3. 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  4. 4பச்சை மிளகாய்
  5. சிறியதுண்டு இஞ்சி
  6. 4பல் தேங்காய்
  7. 100 கிராம் சின்ன வெங்காயம்
  8. காட்டிப் ஸ்பூன் வெந்தயம்
  9. கடுகு உளுத்தம்பருப்பு
  10. 250 கிராம்வெள்ளை பூசணி
  11. சமையல் எண்ணெய்
  12. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் 15 நிமிடம் ஊற வைத்த துவரம் பருப்பு சீரகம் பச்சை மிளகாய் இஞ்சி தேங்காய் ஆகியவற்றை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பூசணிக்காயை சிறிது சிறிது கட்டமாக நறுக்கி ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதை நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்

  3. 3

    பிறகு ஒரு பாத்திரத்தில் 250கிராம் தயிர் சேர்த்து அதில் அரைத்து வைத்த மசாலாவையும் சிறிது பெருங்காயம் சிறிது உப்பு சிறிது மஞ்சள்தூள் ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சிறிதளவு வெந்தயம் கருவேப்பிலை வரமிளகாய் வெங்காயம் ஆகியவற்றை நன்கு வதக்க வேண்டும்
    வதக்கிய பிறகு கலந்து வைத்த மோர் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்

  5. 5

    5 நிமிடம் கழித்து சிறிது கொதித்த பிறகு கெட்டியானதும் இறக்கி விட வேண்டும் சுவையான வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு ரெடி ஆகிவிட்டது நீங்களும் வாசித்துப் பாருங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes

More Recommended Recipes