கிழி பரோட்டா

 யுவஸ்ரீ
யுவஸ்ரீ @Yuva3
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
  1. 250 கிராம் மைதா
  2. 60 -70 மில்லி தண்ணீர்
  3. 2 தெ.கரண்டிஎண்ணெய்
  4. 2வெங்காயம்
  5. 3தக்காளி
  6. 3 தெ.கரண்டிமிளகாய் தூள்
  7. 1 தெ.கரண்டிமல்லி தாள்
  8. 1/2 தெ.கரண்டிகரம் மசாலா
  9. 1/2 கிலோசிக்கன்
  10. தேவையான அளவுஉப்பு
  11. தேவையான அளவுகறிவேப்பிலை,புதினா,மல்லி இலை
  12. தேவையான அளவுஇஞ்சி,பூண்டு விழுது
  13. 2வாழை இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    250 கிராம் மைதா மாவில் தண்ணீரை விட்டு.தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.பின்பு எண்ணெய்- 2 தெ.கரண்டி விட்டு

  2. 2

    கலவையை,30 நிமிடம் நன்கு ஊர வைத்து,பின்பு பரோட்டாவை தயார் செய்ய வேண்டும்.

  3. 3

    கடாயில் எண்ணெய்யை விட்டு, நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கிய பின், இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கி. பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

  4. 4

    பின் தேவையான அளவு உப்பு சேர்த்து,மிளகாய் தூள்,மல்லி தாள்,கரம் மசாலா அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

  5. 5

    பின்பு சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கி, தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். பின் கறிவேப்பிலை,புதினா,மல்லி இலையை சேர்க்க வேண்டும்.

  6. 6

    வாழை இலையை எடுத்து,அடுப்பில் சுட்டு. தயார் செய்த பரோட்டாவை வைத்து அதன் மேல் சிக்கன் மற்றும் சிக்கன் குழம்பை ஊற்றி,அதன் மேல் மற்றும் 2 பரோட்டாவை வைத்து அதன் மேல் மீண்டும சிக்கன் குழம்பை ஊற்றி, இலையை நன்றாக கட்டி.

  7. 7

    தோசை கல்லில் 1/4 டம்பலர் தண்ணீர் ஊற்றி, 5நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்பு சுவையான கிழி பரோட்டா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 யுவஸ்ரீ
அன்று

Similar Recipes