Chappathi peas kurma/சப்பாத்தி பட்டாணி குருமா

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#COLOURS1
ஆரஞ்சு/சிகப்பு வண்ண உணவுகள்

Chappathi peas kurma/சப்பாத்தி பட்டாணி குருமா

#COLOURS1
ஆரஞ்சு/சிகப்பு வண்ண உணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. சப்பாத்தி செய்வதற்கு:
  2. 1 1/2 கப் கோதுமை மாவு
  3. உப்பு
  4. 2 டீஸ்பூன் ஆயில்
  5. தண்ணீர்
  6. பட்டாணி குருமா செய்வதற்கு:
  7. 1கப் காய்ந்த பட்டாணி
  8. 1பெரிய வெங்காயம்
  9. 1தக்காளி
  10. 1பச்சை மிளகாய்
  11. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. மசாலா அரைப்பதற்கு:
  13. 1துண்டு இஞ்சி, 7 பல் பூண்டு
  14. 2டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல்
  15. 1டீஸ்பூன் சோம்பு
  16. 1டீஸ்பூன்கசகசா
  17. 5முழு முந்திரி
  18. 1 1/2டீஸ்பூன் தனியா தூள்
  19. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  20. 1டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  21. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  22. தாளிப்பதற்கு:
  23. 2டீஸ்பூன் ஆயில் 2 டீஸ்பூன் நெய்
  24. 1டீஸ்பூன் சீரகம்
  25. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    1 1/2 கப் கோதுமை மாவை உப்பு 2 டீஸ்பூன் ஆயில் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, மேலே சிறிது எண்ணெய் தடவி 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.

  2. 2

    சப்பாத்தி தேய்க்கும் கல்லில் தேய்த்து, தோசைக்கல்லில் ஆயில் சிறிது விட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

  3. 3

    1 கப் காய்ந்த பட்டாணியை கழுவி நான்கு மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் சேர்த்து ஒரு விசில் வேக வைத்து தண்ணீரை வடித்து விடவும். 1பெரிய வெங்காயம்,1 பச்சை மிளகாய், 1 தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். மசாலா அரைப்பதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், 1 டீஸ்பூன் சோம்பு, 1 டீஸ்பூன் கசகசா, 7 பல் பூண்டு, 1 துண்டு இஞ்சி, 5 முழு முந்திரியை எடுத்து வைக்கவும்.

  4. 4

    குக்கரில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு மசாலா அரைப்பதற்கு தேவையான பொருட்களை நன்கு வதக்கி அதனுடன் 1 1/2டீஸ்பூன் தனியா தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், 1/2 டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி விடவும். இவை அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து விடவும்.

  5. 5

    சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு நைஸாக அரைத்து விடவும். குக்கரில் 2 டீஸ்பூன் ஆயில்,2 டீஸ்பூன் நெய் விட்டு,1 டீஸ்பூன் சீரகம் சிறிது கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

  6. 6

    அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி, 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து விடவும். அரைத்த மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

  7. 7

    வெந்த பச்சை பட்டாணியை சேர்த்து வேக விடவும். நன்கு கலக்கி விட்டு குக்கரை மூடி ஒரு விசில் வேகவிடவும்.

  8. 8

    சுவையான பட்டாணி குருமா ரெடி.😋😋 நான் பட்டாணி குருமாவிற்கு சப்பாத்தி செய்து பரிமாறினேன். அருமையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes