சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும்.

சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)

#flour1 இந்த ரெசிபியை மீந்த சப்பாத்தி அல்லது புதிதாக செய்த சப்பாத்தி கொண்டு செய்யலாம் கோதுமை சப்பாத்தியை பயன்படுத்தலாம் மிகவும் ருசியாகவும் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
இரண்டு நபர்கள்
  1. 5கோதுமை சப்பாத்தி
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 1 தேக்கரண்டிசாம்பார் பொடி
  7. 1/2ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  8. தூள் உப்பு தேவைக்கேற்ப
  9. 1/2 தேக்கரண்டி சோம்பு
  10. கொத்தமல்லி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சப்பாத்திகளை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் நீளவாக்கில்.

  2. 2

    வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு குழிக்கரண்டி சமையல் எண்ணெய் விட்டு தாளிப்பதற்கு சிறிதளவு சோம்பு சேர்க்கவும்.

  3. 3

    பின்பு வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு அரவை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். அதன் பின் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் சாம்பார் பொடி உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடி பிடிப்பது போல் இருந்தால் கால் டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.

  4. 4

    . இதனுடன் உப்பு சேர்த்து மசாலாக்கள் ஒன்று திரண்டு வரும்போது நறுக்கிய சப்பாத்தி துண்டுகளை மசாலாவில் சேர்த்து நன்றாக கிளறவும்.

  5. 5

    பின்பு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். பரிமாறுவதற்கு முன் அலங்கரித்து பரிமாறவும். தொட்டுக் கொள்வதற்கு எதுவும் தேவை இல்லை. குழந்தைகளுக்கும் பிடிக்கும் இந்த ரெசிபி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes