"கோயம்புத்தூர்"ஸ்டைல் ஸ்பெஷல் "தேங்காய் பர்பி"

Jenees Arshad
Jenees Arshad @NJA89912126

#Vattaram
#வட்டாரம்
#Week-9
#வாரம்-9
#கோயம்புத்தூர் ஸ்டைல் ஸ்பெஷல் தேங்காய் பர்பி
#Coimbatore Style Special Coconut Burfi

"கோயம்புத்தூர்"ஸ்டைல் ஸ்பெஷல் "தேங்காய் பர்பி"

#Vattaram
#வட்டாரம்
#Week-9
#வாரம்-9
#கோயம்புத்தூர் ஸ்டைல் ஸ்பெஷல் தேங்காய் பர்பி
#Coimbatore Style Special Coconut Burfi

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்.
  1. 300கிராம்தேங்காய்[1] திருகல் (தேங்காய் பூ=
  2. 200கிராம்சீனி-
  3. 100கிராம்பொட்டுக்கடலை-
  4. 4டீஸ்பூன்நெய்- [தேவையான அளவு]
  5. சுமார் 50மில்லிதண்ணீர்-

சமையல் குறிப்புகள்

15நிமிடம்.
  1. 1

    கோயம்புத்தூர் ஸ்பெஷல் தேங்காய் பர்பிக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.

    1தேங்காயை திருகிக் கொள்ள வேண்டும்.அதில் 300கிராம் தேங்காய் பூ கிடைக்கும்...

  2. 2

    கடாயில் 1டீஸ்பூன் நெய் போடவும்.நெய் சூடான பிறகு 100கிராம் பொட்டுக்கடலையை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் மீண்டும் 1டீஸ்பூன் நெய் போடவும்.நெய் சூடான பிறகு 300கிராம் தேங்காய் பூவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

  4. 4

    சுமார் 50மில்லி அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    அடுத்து 200கிராம் சீனியை போடவும்.மிதமான தீயில் 5 அல்லது 7நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும்.

    அடுத்து 2டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளரவும்.

  5. 5

    அடுத்து வறுத்து வைத்த 100கிராம் பொட்டுக்கடலையை சேர்த்துக் கிளரவும்.

    மிதமான தீயில் 5நிமிடம் கொதிக்கவிடவும்.

    ஏதேனும் ஒரு வட்டாவில்(சில்வர் பாத்திரம்) சிறிதளவு நெய் தடவிக் கொள்ளவும்.

    தேங்காய் பர்பி கலவையை அந்த வட்டாவில் ஊற்றவும்.

  6. 6

    தேங்காய் பர்பியை ஏதேனும் ஒரு கரண்டி அல்லது டம்ளர் அடியில் நெய் தடவி அதன் மேலே வைத்து தடவி சமமாக்கவும்.

    10நிமிடம் கழித்து பீஸ் போட்டுக் கொள்ளவும்....

    அப்போது தான் கட் செய்ய முடியும்.

    1/2 மணி நேரம் கழித்து கட் செய்த பீஸ்களை ஏதேனும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்...

  7. 7

    "கோயம்புத்தூர்" ஸ்டைல் ஸ்பெஷல் "தேங்காய் பர்பி" தயார்...........

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jenees Arshad
Jenees Arshad @NJA89912126
அன்று

Similar Recipes