பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
ஆறு பேருக்கு
  1. 6உருளைக்கிழங்கு
  2. 6 பல் துருவிய பூண்டு
  3. ஒரு ஸ்பூன் வரமிளகாய்த்தூள்
  4. இரண்டு ஸ்பூன் மிளகு தூள்
  5. ஒரு ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  6. ஒரு ஸ்பூன் மிக்ஸ்டு இலைகள்
  7. சிறிதளவுகொத்தமல்லி இலைகள்
  8. 3 ஸ்பூன்சோள மாவு
  9. 3 ஸ்பூன் மைதா மாவு
  10. தேவையானஅளவு பிரட் துகள்கள்
  11. பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வெந்த உருளைக்கிழங்கை தோலுரித்து அதனுடன் மிளகுத்தூள் மிக்ஸ்டு இலைகள் கொத்துமல்லி இலைகள் சில்லி ப்ளேக்ஸ் மற்றும் துருவிய பூண்டு தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு மசித்து பிசைந்து கொள்ளவும்

  3. 3

    பிசைந்த மாவை இரு கைகளிலும் எண்ணை தேய்த்துக் கொண்டு விரல்கள் போல் உருட்டிக் கொள்ளவும்

  4. 4

    சோள மாவு மற்றும் மைதா மாவுடன் சிறிது மிளகுத்தூள் உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ளவும் பிரட் துகள்களை தனியே ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்

  5. 5

    விரல்கள் போல் உருட்டிய உருளைக்கிழங்கு கலவையை சோள மாவு மற்றும் மைதா மாவு கலவையில் நனைத்து அதனை பிரட் துகள்களில் பிரட்டி நன்கு அழுத்தி இதனை 15 லிருந்து 20 நிமிடங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்

  6. 6

    15 நிமிடங்கள் கழித்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து எண்ணெயில் ஒவ்வொன்றாக ஆரஞ்சு நிறம் ஆகும் வரை பொரித்து எடுத்தால் அருமையான சுவையான மொறுமொறுப்பான பொட்டேட்டோ ஃபிங்கர்ஸ் தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes