ஸ்டஃப்டு பீட்சா பராத்தா(stuffed pizza paratha recipe in tamil)

Jayasakthi
Jayasakthi @cook_20204052

ஸ்டஃப்டு பீட்சா பராத்தா(stuffed pizza paratha recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் மைதா மாவு
  2. 1 வெங்காயம்
  3. 1/2 குடை மிளகாய்
  4. 1 கப் துருவிய சீஸ்
  5. 1 கப் வேகவைத்த சோளம்
  6. 1/2டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  7. 1/4டீஸ்பூன் ஓரிகேனோ
  8. தேவையான அளவுஎண்ணெய்
  9. தேவையான அளவுஉப்புத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா மாவில் 2 டீஸ்பூன் எண்ணெய், 1/2 டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  2. 2

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  3. 3

    ஸ்டஃபிங் செய்ய 2 டீஸ்பூன் எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், வேக வைத்த சோளம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    சில்லி ஃப்ளேக்ஸ், ஓரிகேனோ, உப்புத் தூள் சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் வதக்கவும். ஆற வைத்து துருவிய சீஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  5. 5

    ஊற வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து சப்பாத்தி போல் திரட்டவும்.

  6. 6

    மேல் பாதியையும் கீழ் பாதியையும் மடிக்கவும்.

  7. 7

    நடுவில் 1 டீஸ்பூன் ஸ்டஃப்பிங் வைத்து வலது ஓரத்தையும் இடது ஓரத்தையும் மடித்து ஸ்டஃப்பிங்கை மூடவும்.

  8. 8

    எல்லா உருண்டைகளையும் அது போல செய்து கொள்ளவும்.

  9. 9

    தோசைக்கல்லில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayasakthi
Jayasakthi @cook_20204052
அன்று

Similar Recipes