எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
3 பேர்
  1. 1கட்டு வெங்காயத்தாள் கீரை
  2. 1டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  3. 2காய்ந்த மிளகாய்
  4. 3சில் துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயத்தாள் கீரையை நறுக்கும் முன்பு அப்படியே கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

  2. 2

    பிறகு அதன் வெங்காய பகுதி தனியாகவும் கீரை பகுதி தனியாகவும் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து

  4. 4

    பிறகு காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும்

  5. 5

    பிறகு அதில் நறுக்கி வைத்த கீரையின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

  6. 6

    பிறகு வெங்காயத்தாள் கீரை பகுதியை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கினால் போதும்

  7. 7

    கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கவும்.

  8. 8

    அருமையான வாசனையுடன் வெங்காய தாள் பொரியல் ரெடி.

  9. 9

    தோழிகளே இதை சமைக்கும் நேரம் மிகவும் குறைவு.இதிலிருந்து கிடைக்கும் நன்மைகள் அதிகம்.பச்சை வண்ணத்தில் இயற்கையாகவே சத்துக்கள் அதிகம்.இந்த கீரையில் கால்சியம், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.சைனீஷ் ரெசிபிகளில் மட்டுமே சேர்ப்பார்கள் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள்.ஒரு முறை சமைத்து பாருங்கள்.பிறகு வாரம் ஒருமுறை வாங்கி விடுவீர்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Yasmeen Mansur
Yasmeen Mansur @cook_19727112
அன்று
Mumbai

Similar Recipes