எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 minutes
3 பரிமாறுவது
  1. ஒரு டம்ளர் (100ml)உளுத்தம் பருப்பு
  2. அரை டம்ளர்கடலைப்பருப்பு
  3. கால் டம்ளர்எள்ளு
  4. அரை ஸ்பூன்சீரகம்
  5. 5மிளகு
  6. இரண்டு கொத்துகறிவேப்பிலை
  7. அரை ஸ்பூன்பெருங்காயத் தூள்
  8. 6வர மிளகாய்
  9. தேவையான அளவுஉப்பு
  10. ஒரு டேபிள்ஸ்பூன்நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 minutes
  1. 1

    முதலில் வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பை மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    கடலைப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும். எள்ளயும் மிதமான தீயல் பொரியும் வரை வறுத்து எடுக்கவும்

  3. 3

    அதன்பின்பு சீரகம் மிளகை வறுத்து எடுக்கவும்

  4. 4

    பின்பு ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி பெருங்காயம் அல்லது பெருங்காய கட்டியை பொரித்து அதனால் கருவேப்பிலை நன்கு வறுபடும் வரை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும் பின்பு வர மிளகாயை நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    அனைத்தும் சூடு ஆறியவுடன் முதலில் மிளகாய் நன்றாக அரைத்து பின்பு பருப்பு முதலியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இட்லி பொடி ரெடி

  6. 6

    பொடி இட்லி செய்ய இட்லி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு தாளித்து இட்லி பொடியை தூவவும்.

  7. 7

    அதில் இட்லியை சேர்த்து மேலே சிறிது பொடியை மீண்டும் தூவி கலக்கவும். பொடி இட்லி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes