இட்லி பொடி

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#vattaram12
இந்த இட்லி பொடி மிகவும் நன்றாக இருக்கும். இதில் கருப்பு எள்,பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் மிகவும் ருசியாக இருக்கும்.பொட்டுக்கடலை சேர்ந்திருப்பதால் அதிக காரம் இருக்காது. குழந்தைகளுக்குகூட இந்த பொடியை போட்டு நெய் விட்டு கொடுக்கலாம். இட்லி,தோசை,அடைக்கு மிகவும் ஆப்டாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
12பேர்
  1. 1/2கப்க.பருப்பு
  2. 1/2கப்உ.பருப்பு
  3. 200கிசி.மிளகாய்
  4. 1/4கப்பொட்டுக்கடலை
  5. 4டேபிள்ஸ்பூன்கருப்பு எள்
  6. தேவையான அளவுகல் உப்பு
  7. 2டீஸ்பூன்பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    வெறும் கடாயில் முதலில் சி.மிளகாயை சிறிது கல் உப்பு போட்டு வறுக்கவும்.

  2. 2

    மிளகாயை வறுத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.பிறகு க.பருப்பு,உ.பருப்பை வறுத்து சேர்க்கவும்

  3. 3

    பொட்டுக்கடலையை வறுத்து சேர்க்கவும். கருப்பு எள்ளையும் வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    அனைத்தையும் சேர்த்து ஆறவிடவும்.ஆறினதும் மிக்ஸி ஜாரில் போட்டு, கல்உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    சுவையான,"இட்லி பொடி",தயார். இப்பொடி 3மாதங்களுக்கும் மேல் காரமும்,மணமும்,நிறமும் குறையாமல் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes