வாழைக்காய் ஃப்ரை

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

வாழைக்காய் ஃப்ரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  1. 3 வாழைக்காய்
  2. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. ஒரு டீஸ்பூன் ஃபிளாக்ஸ் சீட் பவுடர்
  5. 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  6. ஒரு டீஸ்பூன் கடுகு
  7. ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வாழைக்காய்களை தோல் சீவி வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை தண்ணீரில் சிறிது நேரம் உப்பு சேர்த்து ஊறவைக்கவும்.இதை வடிய வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு பெருங்காயம் சேர்த்து வடிய வைத்த வாழைக்காய்களை சேர்த்துநன்கு பிரட்டி ஐந்து நிமிடம் மூடி வைக்கவும்.

  4. 4

    இப்பொழுது இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.

  5. 5

    தீயை மிதமாக வைத்து நன்கு ரோஸ்ட் செய்யவும். அருமையான வாழைக்காய் ஃப்ரை ரெடி.இதை ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes