மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#vattaram15
இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன்.

மூலிகை பிரியாணி / Herbs briyani receip in tamil

#vattaram15
இந்த பிரியாணியில், துளசி, புதினா, வெற்றிலை, கொத்தமல்லி,கறிவேப்பிலை போன்ற மூலிகை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் ஹெல்தியான,"மூலிகை பிரியாணி",இது.ஆனியன் ரெய்த்தா இதற்கு நல்ல காம்பினேஷன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3/4மணி
6பேர்
  1. 1கைப்பிடிதுளசி இலை
  2. 1கைப்பிடிபுதினா இலை
  3. 2வெற்றிலை
  4. 1 டேபிள்ஸ்பூன்கொத்தமல்லி தழை
  5. 2ஆரக்குகறிவேப்பிலை
  6. சிறுதுண்டுபட்டை
  7. 2ஏலக்காய்
  8. 4கிராம்பு
  9. 1பிரிஞ்சி இலை
  10. 2 டேபிள்ஸ்பூன்இஞ்சி,பூண்டு,ப.மிளகாய் விழுது
  11. 2 கப்வெண் புழுங்கலரிசி
  12. 2 டேபிள்ஸ்பூன்நெய்
  13. 1டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  14. தேவையான அளவுகல் உப்பு ருசிக்கு
  15. 1கப்வெங்காயம் நறுக்கினது
  16. 31/2கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

3/4மணி
  1. 1

    வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.

  2. 2

    அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும்.இஞ்சி,பூண்டு,ப.மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.முதலில் மிக்ஸியில் வெற்றிலையை போடவும்.

  3. 3

    புதினாவை போடவும்.பிறகு கொத்தமல்லி,அடுத்து, துளசியை போடவும்.

  4. 4

    கறிவைப்பிலையை போட்டு அனைத்தையும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.குக்கரில் சிறிது நெய்,எண்ணெய் விடவும்.

  5. 5

    எண்ணெய்,நெய் காய்ந்ததும்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை போடவும்.இஞ்சி,பூண்டு,ப.மிளகாய் விழுது போட்டு வதக்கவும்.பிறகு வெங்காயம்,உப்பு போடவும்.

  6. 6

    வெங்காயம் கண்ணாடி போல் வரும்வரை வதக்கி, ஊற வைத்த அரிசியின் தண்ணீரை அளந்து தனியாக வைத்துவிட்டு அரிசியை குக்கரில் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்.இப்போதுஅளந்த தண்ணீர்,சிறிது எண்ணெய் விடவும்.

  7. 7

    அரைத்த மூலிகை விழுதை போடவும்.ஒன்றுசேர கிளறினதும்,குக்கரை மூடி போட்டு மூடவும்.

  8. 8

    ஒருவிசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஸ்டீம் போனதும் குக்கரை திறக்கவும்.இப்போது உதிர்உதிரியான,*மூலிகை பிரியாணி *,தயார்.செய்து பார்த்து அசத்தவும்.இதற்கு ஆனியன் ரெய்த்தா சரியான காம்பினேஷன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes