அரியலூர் style சிக்கன் கிரேவி/ chicken gravy recipe in tamil

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

அரியலூர் style சிக்கன் கிரேவி/ chicken gravy recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கி சிக்கன்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 11/2 தேங்காய்ச்சில்
  5. சோம்பு
  6. 1பட்டை, கிராம்பு
  7. 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
  8. ஒருக் கொத்து கருவேப்பிள்ளை
  9. 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்
  10. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  11. 2 ஸ்பூன் மல்லித்தூள்
  12. தேவைக்கேற்ப உப்பு
  13. தேவைப்பட்டால் தண்ணீர்
  14. 100 ml எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும் பின் வெங்காயம் மற்றும் தக்காளியை பெரிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும் சிக்கனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும் (நான் மஞ்சள் மற்றும் தயிர்ச் சேர்த்து ஊற வைத்து கழுவினேன் soft ஆக இருக்கும்)

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் 1 1/2 தேங்காய்ச்சில் மற்றும் தண்ணீர் சோம்புச் சேர்த்து அரைக்கவும் (paste பதத்திற்கு)

  3. 3

    ஒரு கடாயில்100 ml எண்ணெய் ஊற்றி அதில் 1 பட்டை 4 கிராம்புச் சேர்த்து கொள்ளவும்

  4. 4

    பின் அதில் 1/2 கி சிக்கனைச் சேர்த்து வதக்கவும் 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்

  5. 5

    வதக்கும் போது அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள் மற்றும் ஒருக் கொத்து கருவேப்பிள்ளைச் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    பின் 1 பெரிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், 2 தக்காளியைச் சேர்த்து வதக்கவும் சிக்கனில் தண்ணீர் வெளியேற ஆரம்பிக்கும் பிறகு 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்ச் சேர்க்கவும்

  7. 7

    பின்பு 2 ஸ்பூன் மல்லித் தூள்ச் சேர்த்துக் கொள்ளவும் அதிகமாக கிரேவி வேண்டும் என்றால் தண்ணீர்ச் சேர்த்து சிக்கனை வேக விடவும்

  8. 8

    பின் தேங்காய்ச்சில் அரைத்தக் கலவையைச் சேர்த்துக் கொள்ளவும்

  9. 9

    ஒருக் கொதி வந்ததும் இறக்கவும் கிரேவித் தயார் பரிமாறவும் புது விதமான சுவையாக இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes