ஃசாப்ட் இடியாப்பம்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து,உப்பு மற்றும் எண்ணெய் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
- 2
கடை மாவு அல்லது வீட்டிலேயே பச்சரிசியை ஊற வைத்து, கடையில் திரித்து மீண்டும் வீட்டில் வறுத்து டப்பாவில் அடைத்த மாவாக இருந்தாலும் சரி,
எந்த மாவாக இருந்தாலும் தேவையான அளவு மாவை எடுத்து வெறும் வாணலியில் 2 நிமிடங்கள் வறுக்கவும்.
- 3
பின்னர், கொதித்த நீரை சிறிது சிறிதாக சேர்த்து,கரண்டியால் கலந்து கொள்ளவும்.
சில சமயங்களில் தண்ணீர் அதிகமாகி விடும் அதை தவிர்ப்பதற்காக,
- 4
ஓரளவிற்கு,தண்ணீர் சேர்த்து கலந்த பிறகு,சிறிதளவு மாவை ஒரு தட்டில் எடுத்து வைத்து அதில் சிறிதளவு கொதித்த தண்ணீர் சேர்த்து உருண்டையாக பிடிக்கவும்.
இவ்வாறு மீதமிருக்கும் மாவையும் உருண்டையாக பிடிக்கவும்.
- 5
ஒருவேளை ஏதேனும் ஒரு உருண்டையில் தண்ணீர் அதிகம் ஆகிவிட்டால் கூட மற்ற உருண்டைகளை வைத்து சரி பண்ணலாம்.
- 6
மீண்டும் அனைத்து உருண்டைகளையும் சேர்த்து ஒரு நிமிடம் பிசையவும். ரொம்ப அழுத்தி பிசைய தேவையில்லை.
- 7
இந்த மாவை, உருண்டைகளாக மாற்றிக்கொள்ளலாம். இப்பொழுது இந்த உருண்டைகளை இடியாப்ப குழலில் விட்டு பிழிய வேண்டும்.
- 8
ஒருவேளை மாவு வரண்டு விட்டால், அருகில் இருக்கும் சுடுதண்ணீரை கைகளில் தொட்டுக்கொண்டு மாவை ஒருமுறை அழுத்தி விட்டு,பின் பிழியலாம்.
- 9
பிழிந்து முடித்ததும், இட்லி குக்கரில் இவற்றை வைத்து 7-8(நிமிடங்களே போதும்) நிமிடங்கள் வேக வைத்து எடுக்கலாம்.
- 10
இவை மிக ஃசாப்டாக இருக்கும்.
ஒரு வேளை, செய்தது மிஞ்சி விட்டால் அப்படியே வைத்து இரவு ஒருமுறை இட்லி குக்கரில் சூடு செய்து சாப்பிட்டால் நன்றாக தான் இருக்கும்.காலை முதல் மாலை வரை அது ஃசாப்டாக தான் இருக்கும்.
இது நான் எஞ்சிய இடியாப்பத்தை, இரவுக்கு செய்தது.
- 11
அவ்வளவுதான் சுவையான ஃசாப்ட் இடியாப்பம் ரெடி.
இதற்கு சாப்பிடும் பொழுது தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். அல்லது தேங்காய் பாலுடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இடியாப்பம் தேங்காய் பால் (Idiappam thenkaai paal recipe in tamil)
#steamரேஷன் பச்சரிசி மாவில் சுலபமான முறையில் சுவையாக செய்த இடியாப்பம். Hemakathir@Iniyaa's Kitchen -
எளிய முறையில் சுவையான இடியாப்பம்
#everyday1ஆவியில் வேகவைத்த உணவு நம் உடலுக்கு உகந்தது அதில் இடியாப்பம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவாகும் Sangaraeswari Sangaran -
இடியாப்பம் பசும்பால்
#everyday3 பொதுவாகவே இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் இவைகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் இடியாப்பத்துடன் பசும்பால் சேர்த்து சாப்பிடும் பொழுது எளிதில் ஜீரணமும் ஆகும் அதே சமயம் பால் சேர்த்து இருப்பதால் நல்ல உறக்கமும் வரும் Laxmi Kailash -
-
-
-
பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்த உளுந்து தேங்காய் கஞ்சி (Ulunthu kanji recipe in tamil)
#india2020இந்தக் கஞ்சி உடலுக்கு மிகவும் சத்தானது. இதில் வெங்தயம் மற்றும் பூண்டு சேர்வதால் நல்ல மருத்துவ குணங்கள் அடங்கியது. Kanaga Hema😊 -
-
-
கேழ்வரகு மாவு இடியாப்பம் (Kelvaragu Maavu Idiyappam Recipe in Tamil)
#ஆரோக்கியசமையல் Jayasakthi's Kitchen -
இனிப்பு இடியாப்பம் (Sweet Idiyappam recipe in Tamil)
#GA4/Breakfast/Week 7*காலை உணவாக அவித்து சமைக்கப்படும் இடியாப்பம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.*எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.*அவித்து சமைக்கும் உணவுகள் மென்மையாக இருக்கும். அதனால் எளிதாக ஜீரணம் ஆகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது. kavi murali -
-
-
ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்
#combo3ரேஷன் பச்சரிசியில் சூப்பராக இடியாப்ப மாவு தயாரித்து இடியாப்பம் செய்யலாம். மாவு அரைப்பது முதல் இடியாப்பம் செய்வது வரை அனைத்து செய்முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
கல்கத்தா எக் கதி ரோல்(calcutta egg kati roll recipe in tamil)
#TheChefStory #ATW1Kati means stick.it refers to the shape of the roll look as stick.முட்டை பரோட்டாவின் நடுவில் வைக்கப்படும்,வெள்ளரிக்காய்,வெங்காயத்துடன் மிளகுத்தூள்,மிளகாய்,மற்றும் சாஸ் சேர்த்து லெமன் பிழிந்து சுருட்டி,அப்படியே பிடித்த பாடல்களைப் பார்த்துக் கொண்டே, நறுக் நறுக்-கென்று மென்று சாப்பிட சுவையாக இருக்கும். என் கற்பனையில் இருந்ததை விட சுவை சிறப்பாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
-
ரவா இடியாப்பம்(rava idiyappam reipe in tamil)
#made1ரவா இடியாப்பம், ரவையை வைத்து செய்தது என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு,அரிசி மாவு இடியாப்பம் போல் சாப்ட் ஆகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
-
கிரிஸ்பி பீனெட் பக்கோடா (Crispy peanut pakoda recipe in tamil)
#GA4#Peanut.மழை காலங்களில் மாலைநேரத்தில் சூடான சுவையான பீனட் பக்கோடா Meena Meena -
ட்ரடிஷ்னல் குழி அப்பம்
#wd அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். என் மகளின் டியூஷன் ஆசிரியைக்கு குழி அப்பம் செய்து கொடுத்தேன். மகளிர் தின ஸ்பெஷல் டெடிகேஷன். Laxmi Kailash -
-
More Recipes
கமெண்ட்