ஹோம் மேட்  பாதாம்கீர் / Badam kheer reciep in tamil

Selvakumari Kumari
Selvakumari Kumari @KUmri

#milk பாதாம் இருதயத்துக்கு நல்லது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  1. அரை லிட்டர்திக்கான பால்
  2. 50 கிராம்பாதாம்
  3. 2ஏலக்காய்
  4. 8 மேசைக்கரண்டிவெள்ளை சர்க்கரை
  5. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள் அல்லது குங்குமப்பூ ஒரு கிராம்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    பாதாம் பருப்பை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது 20 நிமிடம் சுடுதண்ணீரில் ஊற வைக்கவும்

  2. 2

    பிறகு அதை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு வேகமாக ஓட விடாமல் மெதுமெதுவாக ஓடவிட்டு ரவை போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும் அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் பால் நன்றாகக் கொதி வந்ததும் கரண்டியை வைத்து அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டே இருக்கவும்

  4. 4

    பால் கொதிக்கும்போது ஓரங்களில் எல்லாம் பாலாடை ஒட்டிக் கொள்ளாமல் பாலுடன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொண்டே இருக்கவும் பத்து நிமிடம் பால் நன்றாக கொதித்த உடன் அரைத்த பாதாம் பருப்பை சேர்க்கவும்

  5. 5

    மறுபடியும் அதை நன்றாக கலக்கிக் கொண்டே இருக்கவும் 10 நிமிடம் கொதித்தவுடன் சர்க்கரையை சேர்க்கவும்

  6. 6

    அதையும் நன்றாக கலந்து விட்டு ஏலக்காயை பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும் பிறகு கலருக்காக குங்குமப்பூ அல்லது மஞ்சள் தூள் தண்ணீரில் கரைத்து இரண்டு அல்லது மூன்று சொட்டு சேர்த்துக் கொள்ளவும்

  7. 7

    அதை நன்றாக கலந்து விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும் இப்பொழுது பாதாம்பால் தயார்.

  8. 8

    இதை குடிக்க தேவையான அளவு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது பாதாம் கீர் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Selvakumari Kumari
அன்று

Similar Recipes