🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#millk
இந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil

#millk
இந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 1/4 லிட்டர் பால்
  2. 1/2 கப் ரவா
  3. 3 டீஸ்பூன் நெய்
  4. 1/2 கப் தேங்காய் துருவல்
  5. அரை கப் சீனி
  6. 5 முந்திரி
  7. 4 ஏலக்காய்
  8. 5 உலர்ந்த திராட்சை

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் ரவா பால் கோவாவிற்கு தேவையான பொருளை எடுத்து கொண்டு, அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நெய் ஊற்றவும்.

  2. 2

    அதில் அரை கப் ரவை வறுக்கவும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பின்பு தேங்காய் துருவலை அதே கடாயில் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின் கால் லிட்டர் பால் தண்ணீர் சேர்க்காமல் ஊற்றவும். பால் சூடானதும் வறுத்து அரைத்த ரவாவை கைவிடாமல் கொட்டி கிண்டவும்.

  4. 4

    அதோடு கால் கப் சீனி சேர்த்து கிளறவும். வதக்கிய தேங்காயையும் அதோடு சேர்த்து கிண்டவும். 2sp நெய் சேர்த்து, சுருள சுருளக் கிளறவும்.

  5. 5

    கடைசியாக 4 ஏலக்காய், 5 முந்திரி பொடியாக்கி தூவி அடுப்பை அணைத்து இறக்கவும். அதற்கு மேல் உலர்ந்த திராட்சையை 5 வைக்கவும். சுவையான ரவா பால்கோவா ரெடி.🍚🍚

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes