பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#cookwithmilk
#ilovecooking
சுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)

#cookwithmilk
#ilovecooking
சுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பேர்
  1. பன்னீர் துண்டுகள் 200g,
  2. வெண்ணெய் 50g,
  3. பெரிய வெங்காயம் 4,
  4. தக்காளி 6,
  5. இஞ்சி 5 இன்ச்,
  6. பூண்டு 6 பல்,
  7. முந்திரி 6,
  8. தேவையானஅளவு உப்பு,
  9. கரம் மசாலா தூள் 1/2 டேபிள்ஸ்பூன்,
  10. மிளகாய்த்தூள் 1/2 டேபிள்ஸ்பூன்,
  11. சர்க்கரை அரை டேபிள் ஸ்பூன்
  12. தாளிக்க:
  13. எண்ணெய் தேவையான அளவு,
  14. பிரிஞ்சி இலை 1,
  15. ஏலக்காய் 3,
  16. பட்டை 2 துண்டு
  17. கறிவேப்பிலை மல்லி இலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வாணலியில் வெண்ணெய் சேர்த்து, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  2. 2

    பிறகு நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு, முந்திரிபருப்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.. பிறகு அடுப்பை அணைத்து ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

  3. 3

    பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  4. 4

    வாணலியில் சிறிதளவு வெண்ணெய் மற்றும் எண்ணெய் விட்டு பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து, அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

  5. 5

    கரம் மசாலா, மிளகாய் தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து கலந்து லேசாக கொதிக்க விடவும். பன்னீர் துண்டுகள் சேர்த்து கலந்து வேக விடவும்.

  6. 6

    10 நிமிடங்கள் வெந்ததும், கறிவேப்பிலை மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான பன்னீர் பட்டர் மசாலா ரெடி 😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes