சமையல் குறிப்புகள்
- 1
மூன்று முட்டை எடுத்துக் கொள்ளவும்.
- 2
மூன்று முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் முட்டைக்கு தேவையான தூள்உப்பு 1/4 ஸ்பூன் மிளகுத் தூளை போடவும்.
- 3
பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு நன்றாக முட்டையை அடித்துக் கொள்ளவும்.
- 4
இரண்டு தக்காளி பழத்தை ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிப் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதன் உள்புறம் எண்ணெய் தடவிக் கொள்ளவும். பிறகு கலந்து வைத்திருக்கும் முட்டை கரைசலை அதில் சுற்றவும்.
- 6
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதன் உட்புறத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஒரு தட்டை வைத்து கரைத்து வைத்திருக்கும் முட்டை கலவை பாத்திரத்தை அதன் மேல் வைத்து ஒரு தட்டு போட்டு மூடி எட்டு நிமிடம் வேக விடவும்.
- 7
முட்டை வெந்த பிறகு 5 நிமிடம் ஆற வைத்து அதைச் சின்னச் சின்ன துண்டுகளாக பீஸ் போட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 8
அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை,கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 9
பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும் பிறகு அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதை அதில் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை 1 நிமிடங்கள் வதக்கவும்.
- 10
பிறகு அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்,1 ஸ்பூன் மிளகாய்தூள், 1ஸ்பூன் மல்லித் தூள், 1/4 ஸ்பூன் மிளகுத்தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- 11
தண்ணீர் வற்றி கிரேவி பதத்திற்கு வந்தவுடன் முட்டை துண்டுகளை அதில் போட்டு 5 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.பிறகு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
- 12
சுவையான முட்டை சுக்கா தயார். இதை சப்பாத்தி, பூரி, சாதத்துக்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)
#vattaram🤩கமகமக்கும் மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா..😋😋😋 சுண்டி இழுக்கும் சுவையில்.. செய்து பாருங்கள்..🥳 Kanaga Hema😊 -
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)
#nutrient1 பீப்ல் உள்ள சத்துக்கள் புரதம் இரும்பு விட்டமின் பி Soulful recipes (Shamini Arun) -
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்