சைதாப்பேட்டை வடகறி & கீ ரோஸ்ட்

Shanthi
Shanthi @Shanthi007

#veg என் சமையல் . சுவையான ஆரோக்கியமான சமையல்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 100 கிராம்கடலை பருப்பு
  2. 3 நம்பர்மிளகாய் வற்றல்
  3. 1 ஸ்பூன்சோம்பு
  4. தேவையான அளவுஉப்பு
  5. 1 நம்பர்வெங்காயம்
  6. 2 நம்பர்தக்காளி 🍅
  7. 1 ஸ்பூன்இஞ்சி & பூண்டு விழுது
  8. 2 நம்பர்பச்சை மிளகாய்
  9. சிறிது அளவுகறிவேப்பிலை, கொத்தமல்லி இலை
  10. 1 ஸ்பூன்மிளகாய்த்தூள்
  11. 2 ஸ்பூன்மல்லி தூள்
  12. 1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
  13. 1/2 ஸ்பூன்கரம் மசாலா
  14. தேவையான அளவுஎண்ணெய்
  15. பட்டை, கிராம்பு,பிரிஞ்ஜி இலை, சோம்பு தாளிக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடலை பருப்பை ஊற வைக்கவும். ஊறிய பருப்பை மிக்ஸியில் போட்டு அத்துடன் சோம்பு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து ஒன்றும் பாதியுமா அரைத்து எடுக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையை தட்டி போட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு,பிரிஞ்ஜி இலை, சோம்பு சேர்த்து தாளிக்கவும். அத்துடன் வெங்காயம், இஞ்சி & பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி 🍅 சேர்த்து வதக்கவும்.

  3. 3

    தக்காளி 🍅 நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாயை போட்டு கறிவேப்பிலை சேர்த்து மிளகாய் தூள்,மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்.

  4. 4

    வடையை பிய்த்து கொதிக்கும் கிரேவியில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். கீ தோசை செய்து வடகறியுடன் பரிமாறவும். சைதாப்பேட்டையில் புகழ்பெற்ற ரெசிபி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes