மோதகம்(modak recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#npd1 இது பிள்ளையார் சதுர்த்தியில் நிச்சயமாக இடம் பிடிக்கும் ஒரு பிரசாதம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. 1கப் அரிசி மாவு
  2. 1/2கப் கடலைப்பருப்பு
  3. 1/4கப் வெல்லம்
  4. 1ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  5. சிறிதளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    இது நான் இடியாப்ப மாவு பயன்படுத்திதான் செய்துள்ளேன்... முதலில் மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் உப்பை சேர்த்து கலந்து விடவும்.. மற்றொரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து நன்றாக கொதிக்க வைக்கவும்.. அதை மாவில் சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கரண்டி வைத்து கலந்து விடவும்

  2. 2

    மாவு கலவை கெட்டியான பதத்திற்கு வந்ததும் சிறிது நேரம் ஆறவிடவும்..

  3. 3

    கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்... வேகவைத்த கடலைப் பருப்பை மிக்சியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்...

  4. 4

    வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்... அதை கடலை பருப்புடன் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்து நன்றாக சுருண்டு வரும் வரை வதக்கவும்.. ஏலக்காய் தூளையும் சேர்க்கவும்.. இப்போது பூரணம் தயார்

  5. 5

    மாவு ஆறியதும் கொழுக்கட்டை அச்சில் அந்த மாவை வைத்து அதில் நடுவே பூரணத்தை வைத்து மூடி அச்சில் இருந்து வெளியே எடுத்த பிறகு ஆவியில் வேகவிடவும்.. வெந்ததும் சூடாக பரிமாறவும்

  6. 6

    இப்போது சுவையான மோதகம் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes