வெஜ் ஆ கிரேடின்(veg au gratin recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

வெஜ் ஆ கிரேடின்(veg au gratin recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
8 நபர்கள்
  1. 1/4 கப் நறுக்கிய கேரட்
  2. 1/4 கப் நறுக்கிய பீன்ஸ்
  3. 1/4 கப் ஸ்வீட் கார்ன்
  4. 1/4 கப் பச்சை பட்டாணி
  5. 1/4 கப் காலிஃப்ளவர்
  6. 1 டேபிள் ஸ்பூன் வெண்ணை
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  9. 1 டீஸ்பூன் மிக்ஸ் ஹெர்ப்ஸ்
  10. ஒயிட் சாஸ்:
  11. 2 டேபிள் ஸ்பூன் வெண்ணை
  12. 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு
  13. 2 கப் பால்
  14. தேவையானஅளவு உப்பு
  15. 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள்
  16. 1 டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  17. 1 டீஸ்பூன் ஒரிகநோ
  18. 1 டீஸ்பூன் சர்க்கரை
  19. அலங்கரிக்க
  20. 6 ஸ்லைஸ் சீஸ்
  21. 1/2 கப் துருவிய சீஸ்
  22. 2 டேபிள் ஸ்பூன் பிரெட் கிரம்ப்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு வடிகட்டி வைக்கவும். இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கி சிறிது மிளகுத்தூள் மற்றும் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்.

  2. 2

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்த்து உருகியதும் மைதா மாவு சேர்த்து சிறு தீயில் வறுத்து கொள்ளவும் 2 நிமிடம் கழித்து பால் சேர்க்கவும் நன்கு கலந்துவிட இரண்டு நிமிடத்தில் கெட்டியாக மாறிவிடும் இதில் தேவையான அளவு உப்பு மிளகு தூள் சில்லி ஃப்ளேக்ஸ் ஆர்கனோ மற்றும் சர்க்கரை சேர்க்கவும். சமைத்த காய்கறி கலவை யையும் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் கலந்து கொடுத்து அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    ஒரு பேக்கிங் ட்ரேயில் சமைத்த கலவையை ஊற்றவும். அதன் மேல் சீஸ் துண்டுகளை அடுக்கவும். அதன் மேல் துருவிய சீஸ் மற்றும் பிரெட் கிரம்ப்ஸ் தூவவும். இதனை கால் மணி நேரம் கிரிகெட் செய்த ஓவனில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.200 டிகிரியில்.

  4. 4

    பேக் செய்தபின் சூடாக எடுத்து பிரெட் உடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Similar Recipes