பொட்டேட்டோ, முருங்கை இலை பொரியல்(Potato and drumstick leaves poriyal recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

உருளை கிழங்கை பிடிக்காதவர்கள் எவருமே இல்லை.அதே போல் முருங்கை இலையை உருளை கிழங்குடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு சத்துக்கள் அதிகம் கிடைக்கும்.

பொட்டேட்டோ, முருங்கை இலை பொரியல்(Potato and drumstick leaves poriyal recipe in tamil)

உருளை கிழங்கை பிடிக்காதவர்கள் எவருமே இல்லை.அதே போல் முருங்கை இலையை உருளை கிழங்குடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு சத்துக்கள் அதிகம் கிடைக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
6பேர்
  1. 2கப்வேக வைத்து தோலுரித்த உருளை கிழங்கு
  2. 1 கப்முருங்கை இலை
  3. 1கப்வெங்காயம் நீளமாக நறுக்கினது
  4. 1/4 கப்தக்காளி நறுக்கினது
  5. 1டீஸ்பூன்கடுகு
  6. 1ஸ்பூன்உ.பருப்பு
  7. 1/2ஸ்பூன்க.பருப்பு
  8. 2ஸ்பூன்ப.மிளகாய்(நறுக்கினது)
  9. ருசிக்குஉப்பு
  10. 1டீஸ்பூன்ம.தூள்
  11. 1டேபிள்ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்
  12. 1டீஸ்பூன்சர்க்கரை(பச்சை நிறம் மாறாதிருக்க)
  13. 4 டேபிள்ஸ்பூன்எண்ணெய்
  14. தேவைக்குதண்ணீர்
  15. 1ஆர்க்குகறிவேப்பிலை
  16. 1ஸ்பூன்கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    உருளை கிழங்கை இரண்டாக நறுக்கி தண்ணீரில்,உப்பு,ம.தூள்போடவும்.

  2. 2

    பிறகு மூடி போட்டு வேகவிடவும்.கடாயில் எண்ணெய் காய்ந்ததும்,கடுகு, உ.பருப்பு,க.பருப்பு போட்டு தாளிக்கவும்.தாளித்ததும், வெங்காயம், ப.மிளகாய்,ம.தூள், காஷ்மீரி மி.தூள் போட்டு நன்கு வதக்கவும்.

  3. 3

    வதங்கியதும் தக்காளியை போடவும்.சிறிது வதக்கியதும்,முருங்கை இலை, சர்க்கரை போட்டு வதக்கவும்.ஒன்று சேர கிளறவும்.

  4. 4

    பின் வேக வைத்து தோலுரித்த உருளை கிழங்கை போடவும்.அனைத்தையும் அடுப்பை சிறியதில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.கடைசியாக அடுப்பை அனைத்து விட்டு மேலே கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

  5. 5

    இப்போது,* பொட்டேட்டோ, முருங்கை இலை பொரியல்* தயார்.இது சாம்பார் சாதம், ரசம் சாதம், குழம்பு சாதம், தயிர் சாதத்திற்கு, தொட்டுக் கொள்ளலாம்.இந்த பொரியலைச் செய்து பார்க்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes