மொச்சை, வெள்ளை கொண்டக்கடலை சுண்டல்(sundal recipe in tamil)

நவராத்திரி வந்து விட்டது.அம்பாளுக்கு ஒவ்வொரு நாளும் சுண்டல் விதவிதமாக செய்து அசத்துவார்கள்.நான் மொச்சை, கொண்டக்கடலை வைத்து சுண்டல் செய்தேன்.இந்த சுண்டலில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளது.

சமையல் குறிப்புகள்
- 1
மொச்சை, கொண்டக்கடலை இரண்டையும், 8 மணிநேரம் தண்ணீர்விட்டு ஊற வைக்கவும்.
- 2
பிறகு குக்கரில் ம.தூள்,உப்பு போட்டு 6 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.வேக வைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.கடாயில்,எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு,ப.மிளகாய் தாளிக்கவும்.
- 3
பின்பு, வேகவைத்த மொச்சை, கொண்டக்கடலையை போட்டு,அதனுடன் ம.தூள்,உப்பு, காஷ்மீரி மி.தூள் போடவும்.நன்கு கிளறி வேக வைத்த தண்ணீரை விட்டு வேக விடவும்.பின்பு பெருங்காயத் தூள் போடவும்.
- 4
நன்கு கிளறி மூடி போட்டு வேக விடவும்.மூடியை திறக்கவும்.பின் துருவின தேங்காயை போடவும்.
- 5
பிறகு நன்கு கிளறி 5 நிமிடம் வேக விட்டு அடுப்பை நிறுத்தி விட்டு கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தழையை போட்டு நன்கு கிளறவும்.
- 6
இப்போது சுடசுட,* மொச்சை, வெள்ளை கொண்டக்கடலை சுண்டல்* தயார்.மிகமிக சத்தானது இந்த சுண்டல்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்