கார்லிக் மிக்சர் ❤️🔥(garlic mixture recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#DIWALI2021
மிச்சர் செய்வது இதுதான் என் முதல் அனுபவம் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது அதிகம். புதுவிதமான ஒரு சமையல் முறையை நான் கற்றுக்கொண்டேன். மேலும்,சுலபமாக நம் வீட்டிலேயே நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் மிச்சர் செய்து சாப்பிடலாம் என்று நான் உணர்ந்து கொண்டேன்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

⅓ மணி நேரம்
3 நபர்
  1. ¼ கிலோ கடலை மாவு
  2. 100 கிராம் அரிசி மாவு
  3. 1 கட்டி பூண்டு
  4. 4 காய்ந்த மிளகாய்
  5. சிறிதளவுகருவேப்பிலை
  6. தேவையான அளவுவறுத்த பொரி கடலை
  7. தேவையான அளவுவறுத்த வேர்க்கடலை
  8. ¼ தேக்கரண்டி மஞ்சத்தூள்
  9. ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  10. ¼ தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  11. தேவையானஅளவு உப்பு
  12. ½ லிட்டர் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

⅓ மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்,தேவையான அளவு உப்பு, அனைத்தும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலக்கிக் கொள்ளவும். ஒரு ஓட்டை கரண்டியில் கலவையை ஊற்றி எண்ணெயில் கார பூந்தி யாக பொரித்துக் கொள்ளவும்..

  2. 2

    மற்றொரு பாத்திரத்தில் முதல் முறையில் கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து ரொட்டி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.முறுக்கு பிடியில் சிறு ஓட்டையின் வடிவில் இருக்கும் அச்சு வைத்து மாவு கலவையை சேர்த்து ஓமம் ஆக பொரித்துக் கொள்ளவும்.

  3. 3

    பின்பு அதே என்னை கடாயில், கருவேப்பிலை காய்ந்த மிளகாய்,பூண்டு அனைத்தையும் வறுத்துக்கொள்ளவும்.

  4. 4

    பின்பு பொடித்து வைத்த கார பூந்தி யையும் ஓமப்பொடி யும்,வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, அனைத்தும் கலந்து அதில் வறுத்த பூண்டு கருவேப்பிலை, வரமிளகாய் அனைத்தையும் சேர்க்கவும் பின்பு சிறிதளவு மிளகாய்த்தூள் உப்பு, சேர்த்து கலக்கி இறக்கினாள் சுவையான மிக்சர் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
அன்று

Similar Recipes