எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2பேர்
  1. 2முட்டை
  2. 2பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி
  4. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. 1டீஸ்பூன் தனியா தூள்
  6. 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1/4டீஸ்பூன் சீரகத்தூள்
  8. 1/4டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  9. 1/4டீஸ்பூன் முட்டை மசாலா தூள் (store bought)
  10. தேவையான அளவுஉப்பு
  11. மல்லி இலை
  12. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முட்டைகளை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    முட்டைகளை தோல் உரித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி,மல்லி இலை நறுக்கி வைததுக்கொள்ளவும்.

  3. 3

    வேக வைத்த முட்டைகளை விருப்பப்படி துண்டுகள் செய்து வைக்கவும்.

  4. 4

    மசாலா பொருட்களை எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.

  5. 5

    ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை,நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  6. 6

    பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிமாகும் வரை வதக்கவும்.

  7. 7

    வெங்காயம் வதங்கியதும் தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து விடவும். தக்காளி சாறு போல் வரும் வரை வதக்கவும்.

  8. 8

    அதன் பின் தேவையான அளவு உப்பு, மசாலா பொருட்களை சேர்த்து வதக்கவும்.

  9. 9

    பின்னர் தயாராக வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.

  10. 10

    ஐந்து நிமிடங்கள் விட்டு திறந்தால் மசாலா எல்லாம் முட்டையில் கலந்து பிரட்டல் தயாராகிவிடும்.

  11. 11

    பின்னர் நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவி இறக்கவும்.

  12. 12

    இப்போது மிகவும் சுவையான சத்தான முட்டை மசாலா பிரட்டல் தயார்.

  13. 13

    தயாரான முட்டை மசாலா பிரட்டலை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.

  14. 14

    இந்த முட்டை மசாலா பிரட்டல் சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes