ரசமலாய்(rasmalai recipe in tamil)

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

# தீபாவளி ரெசிப்பீஸ் #Cf2

ரசமலாய்(rasmalai recipe in tamil)

# தீபாவளி ரெசிப்பீஸ் #Cf2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3 லிட்டர் பால்
  2. 2எலுமிச்சம் பழம் அல்லது வினிகர் ஒரு ஸ்பூன்
  3. 1 லிட்டர் பால்
  4. 3/4 கிலோசர்க்கரை
  5. ஒரு கப்பாதாம் பிஸ்தா பொடியாக நறுக்கியது
  6. சிறிதளவுகுங்குமப்பூ
  7. அரை டீஸ்பூன்லெமன் ஃபுட் கலர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    3 லிட்டர் பாலை நன்கு பொங்க காய்ச்சவும்.2 எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொட்டை நீக்கி சாறு எடுத்து அதனுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்க்கவும் அடுப்பை சிம்மில் வைத்து எலுமிச்சம் பழ சாறு 2 ஸ்பூன் விட்டு கலந்து விடவும். பால் திரிந்ததும் வடிகட்டி ஒரு துணியில் பனீரை மூட்டை கட்டி வைக்கவும். பனீரை ஒரு தட்டில் கொட்டி, ஒரு ஸ்பூன் மைதா மாவு சேர்த்து நன்கு பிசைந்து உருண்டையாக உருட்டி தட்டையாக செய்து வைக்கவும். ஒரு கப் சர்க்கரையை 3 கப் நீரில் கலந்து விட்டு அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்

  2. 2

    சர்க்கரை கரைந்து கொதித்ததும் செய்து வைத்த ரசமலாய் அதில் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும் மேலே மிதந்து வரும்.திறந்து வைத்து 5 நிமிடம் வேக விடவும்.1லிட்டர் பாலை ஓரளவு சுண்டக் காய்ச்சி அதில் சிறிதளவு குங்குமப்பூ கரைத்து விடவும் தேவையான சர்க்கரை சேர்க்கவும்.ஏலக்காய் தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். தேவைப்பட்டால் லெமன் கலர் சிறிதளவு சேர்க்கலாம். வெந்த ரசகுல்லாவை எடுத்து காய்ச்சிய பாலில் சேர்க்கவும். பொடித்த பாதாம் முந்திரி தூவி அலங்கரிக்கவும்.

  3. 3

    பிரிட்ஜில் குளிர வைத்து பரிமாறலாம். மிகவும் சுவையாக இருக்கும்.நீங்களும் செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Soundari Rathinavel
அன்று

கமெண்ட் (7)

Similar Recipes