வெஜ் மேகி நூடுல்ஸ்(VEG MAGGI NOODLES RECIPE IN TAMIL)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2துண்டுகள் மேகி நூடுல்ஸ்
  2. 1 வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 2பாக்கெட் மேகி மேஜிக் மசாலா
  6. 1/2துண்டு கேரட்
  7. 2 பீன்ஸ்
  8. சிறிதளவுபச்சை பட்டாணி
  9. 1டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து மஞ்சள் தூள்,உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும்.

  2. 2

    பிறகு இவற்றில் கேரட்,பீன்ஸ்,பட்டாணி சேர்த்து வதக்கி 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி காயை வேக வைக்கவும்.

  3. 3

    காய் ஓரளவு வெந்து வந்ததும் மேஜிக் மசாலா சேர்த்து கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நூடுல்ஸ் ஐ உடைத்து போட்டு கொள்ளவும்.

  4. 4

    தண்ணீர் வற்றி மேகி வெந்து வந்ததும் கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

  5. 5

    என் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான வெஜ் நூடுல்ஸ் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes