மட்டன் சுக்கா(mutton sukka recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2நபர்
  1. 500கிராம் மட்டன்
  2. 1 டீஸ்பூன் சோம்பு
  3. 1 டீஸ்பூன் கசகசா
  4. 1டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி
  5. 1டேபிள் ஸ்பூன் மிளகு
  6. 1இன்ச் அளவு பட்டை2
  7. 6 இலவங்கம்
  8. 8 சிவப்பு மிளகாய்
  9. கறிவேப்பிலை
  10. 2டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை
  11. 10சாம்பார் வெங்காயம் நறுக்கியது
  12. 1தக்காளி பொடியாக நறுக்கியது
  13. 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  14. 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  15. தேவையானஅளவு உப்பு
  16. 1/4கப்தேங்காய் துருவியது
  17. 1 டீஸ்பூன் பொட்டுக்கடலை
  18. 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    சோம்பிலிருந்து சிவப்பு மிளகாய் வரை உள்ள பொருட்களை வெறும் வாணலியில் போட்டு வறுத்து நைசாக பொடி செய்து வைக்கவும்

  2. 2

    மட்டனை கழவி சுத்தம் செய்து அதில் உப்பு மஞ்சள் தூள், பொடித்த மசாலா தூள் சேர்த்து 1மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின்னர் ஊற வைத்த மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    இதில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி 1விசில் விட்டு சும்மில் 10 நிமிடங்கள் வேக விடவும்

  6. 6

    தேங்காய், பொட்டுக்கடலை இரண்டையும் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்

  7. 7

    ஸ்டீம் அனைத்தும் அடங்கிய பின் மூடியைத் திறந்து வெந்த மட்டனில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கிளறவும்

  8. 8

    கெட்டியானதும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்தால் மட்டன் சுக்கா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
அன்று
Salem

Similar Recipes