ராகி சேமியா(ragi semiya recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#cf5
Missing letters contest,break fast recipies...
ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. 1பாக்கெட் நரசுஸ் ராகி சேமியா
  2. 1பெரிய தக்காளி
  3. 1பெரிய வெங்காயம்
  4. 4பச்சை மிளகாய்
  5. 2வர மிளகாய்
  6. 1சிறிய எலுமிச்சை பழம்
  7. 1ஸ்பூன் தூள் உப்பு அல்லது தங்களுக்கு தேவையான அளவு
  8. 1ஸ்பூன் எண்ணெய்
  9. 1ஸ்பூன் கடுகு
  10. 1ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  11. 1ஸ்பூன் கடலைப்பருப்பு
  12. சிறிதளவுகருவேப்பிலை கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு தக்காளி ஒரு வெங்காயம் இரண்டையும் பொடியாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாய் பொடியாக அ ரிந்து கொள்ளவும். ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். தாளிக்கத் தேவையான எண்ணெய்,கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை,கொத்தமல்லி அனைத்தையும் எடுத்துக் கொள்ளவும். முதலில் ராகி சேமியாவை ஒரு முறை தண்ணீரில் கழுவி விட்டு மீண்டும் தண்ணீர் இரண்டு டம்ளர் ஊற்றி தூள் உப்பு சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வரை ஊற வைக்கவும். பாக்கெட்டில் 5 நிமிடம் ஊற வைக்க சொல்லி இருப்பார்கள்.

  2. 2

    ஆனால் 10 நிமிடம் ஊற வைத்தால் உப்புமா தாளித்த பிறகு மிகவும் மிருதுவாக இருக்கும்.பத்து நிமிடம் ஊறிய ராகி சேமியாவை நன்கு தண்ணீர் வடித்து விட்டு தனியாக வைக்கவும்.ஒரு இட்லி பானையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லித் தட்டு வைத்து தண்ணீர் வடித்து ராகி சேமியாவை அதில் பரவலாக வைக்கவும். மூடி போட்டு மூடி வைத்து 10 நிமிடம் வரை வேக விடவும். தண்ணீர் கொதித்து பிறகு இட்லி தட்டை வைத்தால் 7 நிமிடம் வெந்தால் போதும்.

  3. 3

    ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பச்சைமிளகாய் வரமிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி தாளித்து விடவும் பிறகு வேகவைத்த ராகி சேமியாவை அதில் போட்டு நன்றாக உதிரியாக வரும் வரை கிளறி விடவும். கடைசியாக ஒரு எலுமிச்சம்பழத்தை பிளிந்து அதில் தங்களுக்கு தேவையான அளவு புளிப்பு சேர்க்க சாற்றை ஊற்றி ஒரு பிரட்டு பிரட்டவும்.

  4. 4

    சுவையான ஆரோக்கியமான டயட் சாப்பிடுபவர்களுக்கு ஏற்றதாக சேமியா உப்புமா தயார்.தேங்காய் சட்னி தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். சாம்பார் கூட தொட்டுக் கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes