அவல் ராகி மாவு ரொட்டி (Flattened rice,Finger Millet flour roti recipe in tamil)

அவலும், ராகி மாவும் சேர்த்து, அத்துடன் காய்கறிகள், தேங்காய் துருவலும் சேர்த்துள்ளதால் நல்ல சுவையும், சத்துக்கள் நிறைத்தும் இந்த அவல் ராகி ரொட்டி மிகவும் சுவையாக உள்ளது.
#CF6
சமையல் குறிப்புகள்
- 1
ரொட்டி செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
அவலை ஒரு பௌலில் சேர்த்து நன்கு கழுவி ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
வெங்காயம், கோஸ், பச்சை மிளகாய், மல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி, கேரட்டை துருவி, தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும்.
- 4
ஒரு பௌலில் ஊற வைத்த அவல், ராகி மாவை சேர்க்கவும்.
- 5
அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், காய்கறிகள் எல்லாம் சேர்க்கவும்.
- 6
அத்துடன் தேங்காய் துருவல், மிளகாய் தூள்,உப்பு, கொஞ்சம் எண்ணை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, மேலும் கொஞ்சம் எண்ணை சேர்த்து பிசையவும். மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.
- 8
ஐந்து நிமிடங்கள் கழித்து மாவை உருட்டி ஒரு தட்டின் மேல் அல்லது அலுமினியம் பாஃயில் பேப்பர் மேல் வைத்து ஓரளவு இலேசாக தட்டவும். பின்னர் சூடான தோசைக்கலில் போடவும்.
- 9
பாஃயில் பேப்பரில் தட்டினால் அப்படியே தோசை கல்லில் போடலாம். தோசை கல்லை சூடு செய்து தட்டி வைத்துள்ள ரொட்டியை போடவும்.
- 10
மேலே கொஞ்சம் எண்ணை ஊற்றி மிதமான சூட்டில் வேக வைக்கவும்.இரண்டு நிமிடங்கள் விட்டு திருப்பி போடவும். நன்கு ஓரங்கள் மொறு மொறுப்பாக வெந்தவுடன் எடுத்தால் சுவையான அவல், ராகி ரொட்டி தயார்.
- 11
தயாரான ரொட்டியை எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும்.
- 12
இப்போது மிகவும் சுவையான, சத்தான கார சார, மொறு மொறு அவல் ராகி ரொட்டி சுவைக்கத் தயார்.
- 13
இந்த ரொட்டியில் அவல் மற்றும் ராகி மாவு கலந்து செய்துள்ளத்தால் மிருதுவாகவும்அதே சமயம் நல்ல மொறு மொறுப்பகவும் இருந்தது. காய்கறிகள் தேங்காய் சேர்த்துள்ளதால் சுவை அபாரமாக இருந்தது. அனைவரும் செய்து சுவைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேழ்வரகு மசாலா ரொட்டி (Finger Millet Masala Roti)


ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)


சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)


ராகி ரொட்டி.(ragi roti recipe in tamil)


ராகி கார கொழுக்கட்டை


ராகி வேர்க்கடலை வடை (Ragi, groundnuts vadai recipe inn tamil)


அரிசி மாவு ரொட்டி (Rice flour Roti) (Akki Roti)


ராகி முருங்கை கீரை ரொட்டி


ராகி ரொட்டி


ராகி ரொட்டி


ராகி சுண்டல் (Ragi Sundal recipe in tamil)


அவல் வெஜிடபிள் கொழுக்கட்டை (Flatenend rice vegetable Kozhukkatai recipe in tamil)


ராகி தட்டை வடை (Finger Millet Tattai vadai recipe in tamil)


ராகி போண்டா(ragi bonda recipe in tamil)


கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)


அரிசி மாவு கார ரொட்டி


ராகி புட்டு / கேப்பை புட்டு(ragi puttu recipe in tamil)


ராகி மாவு சேவை(ragi semiya recipe in tamil)


தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)


கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)


இன்ஸ்டன்ட் மொரு மொரு ராகி தோசை(உளுந்து இல்லாமல்)(instant ragi dosai recipe in tamil)


கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)


கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)


கார அவல் (kaara aval recipe in Tamil)


நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)


சிகப்பு அவல் கேரட் கிச்சடி


ராகி ரொட்டி (Raagi roti recipe in tamil)


புளி அவல் (Tamarind flattened rice)


ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)


ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)

கமெண்ட் (6)