பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

90 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 கப்பு கோதுமை மாவு
  2. 1 கப் மைதா மாவு
  3. 2 மேஜை கரண்டி உப்பு
  4. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  5. தேவையானஅளவு தண்ணீர்
  6. 1/2 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்
  7. 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  8. 2 மேஜைக்கரண்டி மல்லித்தூள்
  9. 1மேஜைக்கரண்டி கரம்மசாலா
  10. 1 மேஜைக்கரண்டி சாட் மசாலா
  11. 4மேசைக்கரண்டி தயிர்
  12. 1 மேஜைக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு
  13. 1 மேஜைக்கரண்டி கசூரி மேத்தி
  14. 1மேசைக்கரண்டி சீரகத்தூள்
  15. பிரங்கி மசாலா
  16. 1 மேஜைக்கரண்டி உப்பு
  17. 1 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள்
  18. 1 மேஜை கரண்டி மிளகாய்த்தூள்
  19. 1 மேஜைக்கரண்டி மல்லித்தூள்
  20. 1மேசைக்கரண்டி ஆம்சூர் பவுடர்
  21. 1மேசைகரண்டி சாட் மசாலா
  22. 1 மேஜைக்கரண்டி கரம்மசாலா
  23. 1/2 கப் வினிகர்
  24. 5 பச்சை மிளகாய்
  25. 7 மேஜைக்கரண்டி மயோனிஸ்
  26. 5மேசைக்கரண்டி சில்லி சாஸ்
  27. 200 கிராம் பன்னீர்
  28. 3 வெங்காயம்

சமையல் குறிப்புகள்

90 நிமிடங்கள்
  1. 1

    முதலில் மைதா மாவு, கோதுமை மாவு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி உப்பு மற்றும் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து மாவை கலக்கி கொள்ளவும். பின்பு வெதுவெதுப்பான நீரை கொண்டு மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.

  2. 2

    பின்பு மேலே கூறியவாறு உப்பு, மிளகாய், மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, தயிர், எலுமிச்சைப் பழச்சாறு, கசூரி மேத்தி, சீரகத்தூள் அனைத்தும் நன்றாக கலந்து கொள்ளவும் பின்பு இதில் நறுக்கிய பனீர் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

  3. 3

    மேலே கூறிய பிராங்கி மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்

  4. 4

    ஒரு பௌலில் வினிகர் மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வைத்துக் கொள்ளவும்

  5. 5

    மற்றொரு பௌலில் மயோனைஸ் மற்றும் சில்லி சாஸ் கலந்து வைத்துக் கொள்ளவும்

  6. 6

    இப்பொழுது பன்னீரை மரக்குச்சிக்குள் நுழைத்து அடுப்பை ஆனில் வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

  7. 7

    இப்பொழுது மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து சப்பாத்தியை போன்று சிறிது மெல்லிசாக பிரங்கி செய்து கொள்ளவும்

  8. 8

    கடைசியாக பிராங்கி வைத்து அதன் மேலே நமது பிராங்கி மசாலாவை சிறிது தூவிவிட்டு மற்றும் சில்லி சாஸ் கலவையை பிராங்கி முழுவதும் தடவிக் கொள்ளுங்கள் பின்பு பன்னீரை வைத்து அதன் மீது சிறிது சில்லி வினிகரை ஊற்றிக் கொள்ளவும். பின் ப்ரெக்கியை மடித்து குழந்தைகளுக்கு சுடச்சுட பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
அன்று

Similar Recipes