அவித்த முட்டை மற்றும் பணியார முட்டைக் குழம்பு(muttai paniyara kulambu recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 5 அவித்த முட்டை
  2. 2 அவிக்காத முட்டை
  3. தேவைக்கேற்ப எண்ணெய்
  4. 1 ஸ்பூன் வெந்தயம், 1 pinch பெருங்காயம்
  5. 1 பச்சை மிளகாய்
  6. 5 பூண்டு
  7. 20 சின்ன வெங்காயம்
  8. 1 கொத்து கருவேப்லை, கொத்தமல்லி இலை
  9. 1 தக்காளி
  10. நெல்லிக்காய் அளவுபுளி
  11. 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள், 3 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  12. சுவைக்கேற்பஉப்பு
  13. தேவைக்கேற்ப தண்ணீர்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவைக்கேற்ப பொருள்களை எடுத்துக் கொள்ளவும் பின் 20 சின்ன வெங்காயத்தை மற்றும் 5 பூண்டை தட்டி எடுத்துக் கொள்ளவும் நறுக்க வேண்டாம் பின் 5 முட்டையை அவித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அவித்த முட்டைய நடுவே கோடுபோட்டுக் கொள்ளவும் மீதம் 2 முட்டையின் செய்முறை பின் வருமாறு

  3. 3

    முதலில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் பின் அதில் 1 ஸ்பூன் வெந்தயம் மற்றும் 1 pinch பெருங்காயத்தூள்ச் சேர்க்கவும் பிறகு 1 பச்சை மிளகாய் சேர்க்கவும்

  4. 4

    பின் ஒருக் கொத்து கருவேப்பிலை தட்டி எடுத்த 5 பூண்டு பின் 20 சின்ன வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்

  5. 5

    நன்றாக வதங்கும் வரை வதக்கி விடவும் பிறகு 1 தக்காளியைச் சேர்த்து வதக்கவும்

  6. 6

    மிதமான தீயில் வதக்கி விடவும் பிறகு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்துக் கொள்ளவும் அதில் கிராமத்து முறையில் கரைத்த புளிக்குள் 1/4ஸ்பூன் மஞ்சள்த்தூள் மற்றும் 3ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்புச் சேர்ந்து புளிக்கரைசலேடு கரைத்துக் கொள்ளவும்

  7. 7

    பின் கரைத்த கரைசலை ஊற்றி பின் குழம்பிற்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து கொதிக்க விடவும்

  8. 8

    நன்றாக கொதித்து குழம்பு வற்றும் நிலை வரும் போது நடுவில் கீரி எடுத்த முட்டையேச் சேர்க்கவும் பின் ஒருக் கொத்து மல்லி இலைகளேச் சேர்க்கவும்

  9. 9

    பிறகு அவித்த முட்டைக் குழம்பு தயார் பரிமாறவும் சுவையாக இருக்கும்

  10. 10

    அதே குழப்பில் புதிய modulation செய்ய விரும்பி 2 முட்டையே ஒருப் பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதில் 1 pinch மஞ்சள்த்தூள் 1 pinch உப்புச் சேர்க்கவும்

  11. 11

    பின் காரத்திற்கு சிறிது மசால்த் தூவி நன்றாக beet செய்துக் கொள்ளவும்

  12. 12

    பின் அதை பணியாரத்குழிக்குள் ஊற்றி வெந்ததும் திருப்பி விடவும்

  13. 13

    நன்றாக வெந்ததும் எடுத்து கொதிக்கும் குழம்பிற்குள்ச் சேர்த்து கொதிக்க விடவும்

  14. 14

    பின் சுவையான முட்டை பணியாறக் குழம்பு தயார் பரிமாறவும்

  15. 15

    இரண்டு சுவையான குழம்புகளையும் முயற்சிக்கவும் மற்றும் என்னை பின் தொடரும் நண்பர்களுக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களும் பல.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

Similar Recipes