சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#welcome
இந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4மணி நேரம்
4பேர்
  1. 2 1/4கப் மைதா மாவு
  2. 1கப் பால்
  3. 1/4கப் எண்ணெய்
  4. 1/4கப் +1டேபிள் ஸ்பூன் வெள்ளை சர்க்கரை
  5. 1டேபிள் ஸ்பூன் ஈஸ்ட்
  6. 1.5டேபிள் ஸ்பூன் கோகோ பவுடர்
  7. 1/2ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி தூள்
  8. 1/2ஸ்பூன் உப்பு
  9. 1/4 கப் மைதா மாவு,மாவு தேய்க்கும் போது தூவ
  10. கடைசியாக சேர்க்க:
  11. 1/4டம்ளர் காய்ச்சாத பால்
  12. 1ஸ்பூன் சர்க்கரை
  13. 2ஸ்பூன் உருக்கிய வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

4மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

    1கப் கை பொறுக்கும் சூடு உள்ள பாலில் வெள்ளை சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து கலந்து,15நிமிடங்கள் மூடிவைத்தால்,ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகிவிடும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில்,ஈஸ்ட் கலவை மற்றும் உப்பு சேர்த்து சலித்த மாவை 3 பங்காக சேர்த்து கிளர வேண்டும்.

  3. 3

    இப்பொழுது,மாவை நன்கு தேய்ப்பதற்கு வசதியான இடத்திற்கு மாற்றி,சிறிதளவு மாவு தூவி,/4கப் ஆயில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து 20 நிமிடங்களுக்கு நன்றாக பிசையவும்.

  4. 4

    பின் மாவை 2 பங்காக பிரித்து,மாவு தூவி முதல் பங்கு மாவை 3 நிமிடங்களுக்கு பிசையவும்.

  5. 5

    பின் 2ம் பங்கு மாவில் கோகோ பவுடர் மற்றும் காபித்தூள் சேர்த்து அதனுடன் 1/2ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும்.

    கோகோ பவுடர் மற்றும் காபித்தூள் இரண்டையும் மாவில்,எப்பொழுது சேர்க்கின்றோமோ அப்போது அளந்து சேர்க்கவும்.முதலிலேயே அளந்து வெளியே வைத்து விட்டால் கட்டிப் பட்டு விடும்.

  6. 6

    இரண்டு தனித்தனி பாத்திரங்களில் மற்றும் மாவின் மேலும் சிறிதளவு எண்ணெய் விட்டு,வெதுவெதுப்பான இடத்தில் வைத்து,1.30 மணி நேரம் மூடி வைக்கவும்.

    1.30 மணி நேரம் கழித்து,மாவு இருமடங்காகியிருக்கும்.

  7. 7

    முதலில்,வெள்ளை கலர் மாவை 1 நிமிடம் பிசைந்து, பின்,சப்பாத்தி போல் விரித்து விடவும்.

    பின் பிரவுன் கலர் மாவை எடுத்து 1நிமிடம் பிசைந்து அதையும் பெரியதாக விரித்து விடவும்.

  8. 8

    பிரவுன் கலர் மாவின் மேல், வெள்ளைக கலர் மாவை வைத்து 2-யும் அழுத்தி, செவ்வகமாக நீட்டவும்.

    இதை 3/4 பங்கும்,1/4பங்குமாக பிரித்து,3/4 பங்கில் மேலிருந்து நீளமாக வெட்டவும்.

  9. 9

    வெட்டிய துண்டுகளை சுருள் சுருளாக திருக்கவும்.இழுத்து திருக்கினால் வேக வைக்கும் போது உப்பி பிய்ந்து விடும்.
    முழுவதுமாக சுருட்டி விட்டதும்,1/4பங்கு மாவை மேலிருந்து உருடிக் கொண்டு வரவும்.

  10. 10

    முழுவதுவமாக உருட்டிய பிறகு பார்க்கவே அழகாக இருக்கும்.இதை பிரெட் செய்யும் ட்ரேயில் எண்ணெய் தடவி,கீழே பட்டர் பேப்பர் வைத்து 30-45 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  11. 11

    மாவு இன்னும் கொஞ்சம் மேலெழும்பி வந்திருக்கும்.

    இதனுடன்,பிரெட்டின் மேல் பக்கம் பிரவுன் கலர் வருவதற்காக காய்க்காத பால் மற்றும் 1ஸ்பூன் சுகர் சேர்த்து கலந்து தேய்க்கவும்.

  12. 12

    இப்பொழுது அடி கனமான பாத்திரத்தில்,மண் அல்லது உப்பு போட்டு ஸ்டாண்ட் வைத்து மூடி போட்டு 10 நிமிடங்கள் சூடு செய்யவும்.

  13. 13

    பின்,பிரேட் ட்ரே யை உள்ளே வைத்து மூடி 30-40நிமிடங்கள் வேக விடவும்.வேகும் பொழுதே வாசனை நன்றாக (வரும்)இருக்கும்.

  14. 14

    ஒரு போர்க் ஆல் குத்திப் பார்த்து,ஒட்டாமல் வந்தால் வெந்து விட்டது. நன்றாக சாப்ட் ஆக இருக்கும்.

    வெளியே எடுத்து அதன் மேல் உருக்கிய வெண்ணெய் தடவி,ஆற விட்டு,துண்டுகள் போட்டு பரிமாறலாம்.

  15. 15

    அவ்வளவுதான்.சுவையான சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட் ரெடி.

    இது காபி,டீ யுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    டோஸ்ட் செய்தும் அல்லது ஜாம் மற்றும் சாக்கலேட்டு தேய்த்தும் சாப்பிட சுவையாக இருக்கும்.

    டப்பாவில் வைப்பதை விட,கெட்டியான பிளாஸ்டிக் கவரில் போட்டு வைத்தால் 2 நாட்களுக்கு வைத்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes