செட்டிநாடு சிக்கன் குழம்பு(chettinadu chicken kulambu recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#m2021
இந்த செய்முறை,விருந்தினர் வந்த பொழுது,2கிலோ சிக்கனுக்கு,15-20 பேருக்கு செய்து பரிமாறி,பாராட்டும் பெற்றேன். அது மட்டுமல்லாது,என் வீட்டிலும் அனைவருக்கும் பிடித்த ரெசிபி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6-7 பேர்
  1. 1/2கிலோ சிக்கன்
  2. 30 சின்ன வெங்காயம்
  3. 3டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. சிறிதளவுமல்லித்தழை
  5. தேவையானஅளவு உப்பு
  6. மசாலா1:
  7. (3டேபிள் ஸ்பூன் மல்லி விதை
  8. 1டேபிள் ஸ்பூன் சீரகம்
  9. 1டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம்
  10. 1/2டேபிள் ஸ்பூன் மிளகு
  11. 2காஷ்மீரி மிளகாய்
  12. 3-4பெரிய வரமிளகாய்
  13. 1பட்டை
  14. 1கிராம்பு
  15. 2ஏலக்காய்
  16. 1நட்சத்திர சோம்பு)
  17. மசாலா2:
  18. (3ஸ்பூன் நால்லெண்ணெய்
  19. 1பெரிய வெங்காயம்
  20. 1பெரிய தக்காளி
  21. 1/4முறி தேங்காய்)
  22. தாளிக்க:
  23. ஒரு சிறிய குழிகரண்டி அளவு நல்லெண்ணெய்
  24. 1/4ஸ்பூன் பெருஞ்சீரகம்
  25. சிறிதளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மசாலா 1-ல் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை,வெறும் வாணலியில் வறுத்து,ஆற வைத்து அரைக்கவும்.

  2. 2

    அதே வாணலியில் எண்ணெய் விட்டு,நறுக்கிய வெங்காயம் வதக்கி,தக்காளி சேர்த்து வதக்கி,தேங்காய் துருவல் சேர்த்தி கிளறி அடுப்பை அணைத்து, ஆற வைத்து அரைக்கவும்.

  3. 3

    தேவையான பொருட்களை எடுத்து கொள்ளலாம். சிக்கன் துண்டுகளை நன்றாக கழுவி வைக்கவும்.

  4. 4

    குக்கர் அல்லது கடாயில் எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும் பெருஞ்சீரகம்,கறிவேப்பிலைதாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின் சிக்கன் துண்டுகளை சேர்த்து 5-7நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.வதக்கினால் தான் கவுச்சி வாசம் போகும்.

  6. 6

    பின்,அரைத்த 2 மசாலக்களையும் சேர்த்து நன்றாக 5 நிமிடங்களுக்கு கிளறி விடவும்.உப்பு சேர்க்கவும்.

  7. 7

    பின் 2 டம்ளர்(500ml)தண்ணீர் சேர்த்து கலந்து கொதித்ததும்,உப்பு சரி பார்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

  8. 8

    ஆவி அடங்கியதும்,திறந்து குழம்பு பதம் சரி பார்த்து,இன்னும் கெட்டியாக வேண்டுமெனில்,5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும்.

    கடாயில் செய்தால்,20-25 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு,சிக்கன் நன்றாக வெந்து,குழம்பு பதம் வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.

  9. 9

    அவ்வவளவுதான். சுவையான,செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி.

    இது சாதம், சப்பாத்தி, பரோட்டா,இட்லி,தோசை என அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.

    இங்கு தேங்காய் துருவல் 1/4முறிக்கும் குறைவாகக் கூட சேர்க்கலாம்.ஆனால், அதிகமாக சேர்க்க கூடாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes